உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 221

செய்திகளும் மூவேந்தர் பெருமைகளும் விளங்கும்படி இக் காப்பியம் இயற்றப்பட்டிருக்கின்றது. கடைச் சங்க காலத்துப் புலவராகிய சித்தலைச் சாத்தனுருடைய நண்பர் இளங்கோவடிகளாற் செய்யப்பட்ட இச் செய்யுள் கடைச் சங்கத்தின் இறுதிக் காலத்தைச் சார்ந்தது. கி. பி. இரண்டு அல்லது மூன்ருவது நூற்ருண்டில் இருந்த கயவாகு என்னும் அரசனுடைய செய்தி இக் காப்பியத்துள் வருதலின் இந்நூல் அக் காலத்தில் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. ஐம்பெருங் காப்பியங்கள்ாகச் சொல்லப்படும் நூல்களில் இதுவே காலத்தால் முந்தியதாகும். இந் நூலுக்கு அரும்பத உரை ஒன்றும் அடியார்க்கு நல்லார் உரை ஒன்றும் உண்டு.

இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றை யும் பரக்கக் கூறுவது; நாடகக் காப்பியம் எனவும் வழங்கு வது. இதன்கண் இக்காலத்தில் வழங்காத பல வகை இசைப் பாட்டுக்கள் இருக்கின்றன.

கதாநாயகளுன கோவலன் மாதவியின்பால் மயங்கி இளமைக் காலத்தில் ஒரு பகுதியைக் கழித்துவிட்டு மனம் திரும்பித் தன் மனைவியாகிய கண்ணகியோடு மதுரை சென்று அங்கே திருட்டுக் குற்றம் சாட்டப் பெற்று உயிர் இழக்கிருன். மேல்நாட்டார் கூறும் டிராஜடி'என்ற வகைக்கு இது சிறந்த உதாரணமாகும். கதாநாயகன் தன்நிகரில்லாத் தலைவகை வேண்டும் என்ற பிற்கால வரையறை , இக் காப்பியத்துக்கு. ஒவ்வாது.

கோவிலன் கதை

சிலப்பதிகாரக் கதை பிற்காலத்தில் பல படியாக வேறுபட்டு வழங்குவதாயிற்று. கோவல்ன், கோவில