உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - தமிழ்க் காப்பியங்கள்

ஞகவும் கண்ணகி கர்ணகையாகவும் மாதவி மாதகி யாகவும் மாசாத்துவான் மாச்சோட்டானுகவும் ஆயி னர். கதையும் அங்கங்கே பல மாறுபாடுகளை அடைந்தது. கண்ணகி துர்க்கையின் அவதாரமென்று கதைக்கத் தொட்ங்கினர். கேள்வின்ை கதை' என்று அம்மானைப் பாட்டில் இயற்றப்பட்ட நூலால் இவை தெரிகின்றன. அல்லியரசாணி மாலை முதலியவற்ருேடு ஒருங்கு எண்ணுதற்குரிய அதுவும் புகழேந்திப் புலவரால் இயற்றப் பெற்றதாக வழங்குகின்றது -

வைசிய புராணம் என்னும், புத்தகத்தில் 82-ஆம் சருக்கமாகிய பஞ்ச காவியத் தலைவரில் மாசாத்து வாணிபன் சிலப்பதிகாரம் பெற்ற சருக்கம்' என்பதிற் கூறப்பட்ட கதைச் சுருக்கம் வருமாறு :

காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்து வாணிபன் குலத்தில் மணியரசன் என்ருெருவன் பிறந்தான். அவனுக்கு இரு மனைவியர். மூத்தாளிடம் ஒரு குமார னும் இளையவள்பால் இரு குமாரரும் பிறந்தனர். அம்மூவருக்கும் தன் பொருளைப் பங்கிட்டு அளித்து விட்டு மணியரசன் இறந்தான். அம்மூவருள் மூத்தவன் தன் செல்வத்தை நல்லற நெறியிற் செலவழித்து விட்டு எண்ணெய் வியாபாரம் செய்யத் தொடங்கின்ை.

அவன் தினந்தோறும் அயலூர்களுக்குச் சென்று எண்ணெய் விற்றுவிட்டு மீளுகையில் வழியில் இருந்த துர்க்கையின்கோயிலில் விளக்குப்போட்டுவிட்டு வருவது வழக்கம். அக்கோயில் பாண்டி நாட்டில் இருந்தது. துர்க்கை ஆண்டுதோறும் நரபலி விரும்புகிறவளாதலின், யாரும் அக் கோயிலுக்கு விளக்கேற்றல் கூடாதென்று பாண்டியன் கட்டளையிட்டிருந்தான். அது தெரியாத