உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 231

குண்டலகேசி யென்னும் காப்பியம் பெருங்காப்பியம் அன்று, வாத நூலைத் தனியே சொல்வதினும் அதற்கு ஒரு கதைத் தொடர்ச்சியை அமைத்தால் படிப் போருக்குச் சிரமமின்றி இருக்கும் என்ற கொள்கையின் மேல், குண்டலகேசி முதலிய கேசிகள் எழுந்தன வென்றே தோற்றுகின்றது. இந் நூற் செய்யுள் ஒவ் வொன்றும் காதை என்னும் பெயரால் வழங்கப்பட்ட தென்று நீலகேசி உரையினுல் அறியலாம்.'

இக் காப்பியத்தின் உள்ளுறை ஒருவாறு நீலகேசி யுரையில் சொல்லப்பட்டது. குண்டலகேசி யென்னும் ஒருத்தி புத்த சங்கத்தில் பி கூடி-ணியாக இருந்தா ளென்று தேரிகாதை யென்னும் நூலால் தெரிய வருகின்றது. அங்கே அவளுடைய வரலாறு சொல்லப் படுகின்றது. அவ் வரலாறும் நீலகேசியிற் கண்ட வரலாறும் பெரும்பாலும் ஒன்றியிருக்கின்றன. ஆயினும் அதனுல் வேறு சில புதிய செய்திகளும் அறியப்படு கின்றன. குண்டலகேசி தன் கணவனைக் கொன்ற பின்பு பல மதவாதிகளையும் வென்று புத்த சமயத்துட் புக்கா ளென்பது நீலகேசியில் கூறப்பட்டது. தேரிகாதையில் உள்ள வரலாறு சிறிது விரிவாக அமைந்தது.

'கணவனை க் கொன்ற பத்திரை தன் வீடு சென்ரு ளிலள்; நிக்கந்தவாதிகள் கூட்டத்துப் புக்காள். அவர்கள் அவள் மயிரைக் களையச்செய்து தம் குழுவினுட் சேர்த்துக் கொண்டனர். அவளுக்கு மீண்டும் கூந்தல் வளர்ந்தபோது அது சுருள் சுருளாக அமைந்தது. அதனுல் அவளை யாவரும் குண்டலகேசி யென்று அழைக்கத் தொடங்கினர். நிக்கந்தவாதிகளின் கொள்கை முற்றும் அறிந்த பின்னர் அதனல்

1. புறத் திரட்டு, நூன் முகம் , xix. 2. Neelakesi edited by Prof., A Chakrav arthi, M. A., I. E. s. p. 75.