உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

தமிழ்க் கர்ப்பியங்கள்

குண்டலகேசியும், தற்கொல்லியை முற்கொல்லிய என்பவன்றே! இவனை யான் கொல்வேன்' என நினைந்து, 'யான் சாகிறேளுகில் உம்மை வலங் கொண்டு சாவல் என, அதற்கு இயைந்த காளனே வலங் கொள்கின்ருள் வரையினின்றும் வீழ நூக்கிள்ை. நூக்கக் காளனும் புத்த ஸ்மரணத்திளுல் மோகூஜித்தனன். குண்டலகேசியும் பர்த்ருவிரஹ. துக்கிதையாகித் துறப்பனென நினைந்து பரஸ் மயங் களெல்லாம் நாவல் நட்டு ஜயித்துப் பெளத்த தரிசனங் கொண்டு முத்தி பெற்றனள்.'

இதளுல் குண்டலகேசி என்பது பெளத்த சமய

நூலென்றும் அதனை மறுக்கவே நீலகேசி எழுந்த தென்றும் விளங்குகின்றது.

நீலகேசியிற் கண்ட செய்திகளால் குண்டலகேசி

தாதகுத்தன ரென்னும் ஒருவரோடு வாதம் புரிந்தாள் என்பது தெரிய வருகின்றது.

புறத்திரட்டில் குண்டலகேசியிலிருந்து பத்தொன்

பது செய்யுட்கள் வந்துள்ளன.

'முன்ருன் பெருமைக்கண் நின்ருன்முடி

வெய்து காறும் .

நன்றே நினைந்தான் குணமொழிந்

தான்ற னக்கென்

ருென்ருனும் உள்ளான் பிறர்க்கே

உறுதிக் குழந்தான்

அன்றே இறைவன் அவன்ருள்சர

ணங்க ளன்றே'

என்பது இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுளென்று தெரி கின்றது.

1. நீலகேசி, மொக்கலவாதச். 20, உரை: 2. ப. வீ. ப. 488.