உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கிய்ங்கள் 25 ||

ஆதலின் பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை யென்பவர் வில்லிபாரதத்தையே விரித்துப் பல செய்யுட்களைப் பாடிச் சேர்த்தார். அரங்கநாதக் கவிராயர் என்பவர் பின்னும் விரிவாகப் பாரதத்தை அமைத்தனர்.

மாவிந்தம் என்னும் பெயரால் தமிழில் பாரதக்

கதையைச் சொல்லும் ஒரு நூல் இருக்கிறது. அது சிறந்த கவிச் சுவையை உடையதன்று என்று கூறுவர்.

பழைய காஞ்சிப் புராண ஆசிரியர் ஒரு பாரதத்தை இயற்றியுள்ளார் என்று அப்புராணச் சிறப்புப்பாயிரம் தெரிவிக்கின்றது. அந்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை. ஆதி பருவத்து ஆதி பருவம் என்பதொரு நூல் உண்டு. அது வியாச பாரதத்தின் முற்பகுதியைக் கூறுவது.'

இராமாயணங்கள்

ஜைனர்களுடைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்தது. அதிலுள்ள சில செய்யுட்கள் மட்டும் இப் பொழுது கிடைக்கின்றன. இராமாயண வெண்பா என்னும் ஒரு நூல் பிற்காலத்தில் உண்டாயிற்று.

சங்க காலத்து இராமாயணத்தின் பின் நெடு நாட்களாக இராமாயணம் இயற்றப் பெறவில்லை. பின்னர், கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் கற்ருேர் இதயம் களிக்க இராமாவதாரம் என்னும் பெயரை யுடைய இராமாயணத்தைப் பாடினர்.

1. அணிமையில் சென்னே அரசாங்கத் தொன்னூல் கிலேயத்தினரால் வெளியிடப் பெற்றிருக்கிறது.

2. ராவ்பகதுர் மு. இராகவையங்கார்: ஆராய்ச் சித் தொகுதி, tյ. 17-99. -