உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தமிழ்க் காப்பியங்கள்

2

5

2

முற்காலக் காப்பியங்கள் யாவற்றையும் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழருள்ளத்தைத் தேக்கி வைத்த பெரும்புகழ் கம்பராமாயணத்துக்கு உரிய தாகும். இப்பொழுதுள்ள காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்னும் நூல்களுக்குப் பழமையில்ை ஒரு மதிப்பு உண்டு. ஆயினும் நாளடை வில் தமிழுலகத்திற் பெருகிவந்த காப்பிய நடையும் கவினும் ஒருங்கே திரண்டு கம்பராமாயணத்திற் குடி கொண்டிருக்கின்றன. கம்பராமாயண காலம் வரையில் உள்ள நூல்களை ஆராயின் காப்பியத்தின் அமைப்புச் சிறிது சிறிதாக வேறுபட்டுச் சுவை கெழுமி வளர்ந்தது என்பது தெரியவரும். பண்டைக் காலத்துப் பொருட் டொடர்நிலைச் செய்யுட்கள் வெண்பாவாலும் ஆசிரியப்பா வாலும் இயன்றவை. விருத்த யாப்பிலே காப்பியம் இயற்றத் தொடங்கினவர் திருத்தக்கதேவர். அவ ருடைய காப்பியம் மிகச் சிறந்ததாயினும் சமயக் கருத்துக்களைப் புகுத்தும் இடங்கள் உண்டு. முத்தி யிலம்பகம் முழுவதும் அத்தகையதே. இலக்கியச் சுவையைத் தனித்து அநுபவித்து வருகையில் சமய நூற்கருத்துக்களை இடையிட்டு விளக்குதல், கடித் தமைந்த பாக்கினிற் கற்படுதலைப் போன்றது. அவ்வச் சமயத்தினர்களுக்கு அவை இன்பம் பயப்பனவாயினும் காப்பியம் என்னும் பொதுப் பூங்காவனத்தில் உள்ள பொருள் யாவும் யாவராலும் விரும்பத் தக்கனவாக இருத்தல் வேண்டும். பெருங்கதை ஆசிரியரும் சிலப்பதிகார ஆசிரியரும் இங்ங்னம் தம்முடைய சமயப் பற்ருல் ஒரு பகுதியைச் சிறைப்படுத்தாமல் தம் நூல்களை மிக அழகாக அமைத்திருக்கின்றனர். .மணிமேகலையோ அத்தகையது அன்று.

சீவக சிந்தாமணியின் யாப்பு ஆற்ருெழுக்கைப்போல அமையவில்லை. விருத்தயாப்பில் முதல்முதலில் காப்பியம்