உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 261

முற்றும் கிடைப்பவை சிலப்பதிகாரமும் மணிமேகலையு மாகும். படித்து அநுபவிப்பதற்கு உரியனவும் நமக்குக் கிடைப்பனவுமாகிய காப்பியங்களுள் இவையே தொள் மையானவை. எனவே, இப்பொழுது வழங்கும் காப்பியங்களின் வளர்ச்சி முறையை வகுப்பதற்கு முதலில் உதவுவன இவ்விரண்டுமே யாகும். இவை இரண்டும் சங்க காலத்தை அடுத்தே தோன்றினமை யின் இவற்றின் சொற்பொருளமைப்பினுல் அக் கால இலக்கியங்களின் சொற்பொருளமைப்பின் போக்கை ஒருவாறு உணர்ந்துகொள்ளலாம்.

இவ்விரண்டுக்கும் பின்னர் வருவன ஜைன சமயக் காப்பியங்களாகிய பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பன. அவற்றின் பின் எழுந்தவை பாரத வெண்பா, பெரியபுராணம், கம்ப ராமாயண்ம், பாகவதம் என்பவை. அவற்றின் பின் வந்தவை புராண வகைகளும் பிற காப்பியங்களும் ஆகும்.

இந்நாட்டிற்கு வந்த பிற சமயத்தினரும் அவர்களைச் சார்ந்தோரும் தங்கள் தங்கள் சமய சம்பந்தமான வரலாறுகளை அமைத்து நூல்களை இயற்றியிருக்கின்ற னர். உமறுப் புலவர் இயற்றிய சீருப் புராணமும், வீரமா முனிவர் என்னும் பெஷிப் பாதிரியார் இயற்றிய தேம்பாவணியும், கிருஷ்ணபிள்ளை பாடிய இரட்சணிய யாத்திரையும் இவ்வகையைச் சார்ந்தவை. இரட்சணிய யாத்திரை ஆங்கிலக் காப்பியம் ஒன்றைத் தழுவிப் பாடப்பெற்றதாகும். - -

சிலப்பதிகாரச் சிறப்பு

சிலப்பதிகாரத்தில்தமிழுக்கே உரியசிறப்பியல்புகள் பல அமைந்துள்ளன. செவ்விய நடையும் பொருட்