உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தமிழ்க் காப்பியங்கள்

செறிவும் உயர்ந்த பாவிகமும் அந்நூலின் தனிச் சிறப் புக்கள். ஒரு சார்பாக விஷயங்களைத் திரித்துக் கூறும் இயல்பு இளங்கோவடிகள்பால் இல்லை. மூன்று நாட்டை யும் மூன்று மன்னர்களையும் அவர் கோடுதல் இன்றி ஒப்பப் புகழ்கின்ருர் மூன்று காண்டங்களாகத் தம் நூலை வகுத்து ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு காண்டத்துள் வருணிக்கும் செவ்வியை உண்டாக்கிக்கொண்டிருக் கின்ருர் மூன்று தமிழைப்பற்றியும் கூறும் தகுதி அவர் பால் இலங்குகின்றது.

இளங்கோவடிகள் ஜைன சமயச் சார்புடையவர் என்பதற்குரிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இலைமறை காய்போலக் காணப்படுகின்றன. ஆயினும் அவர் பிற சமயங்களில் விரோத உணர்ச்சி பூண்டவர் அல்லர். அவருடைய காப்பியக் கோயிலிலே முதலில் சந்திரன், சூரியன் என்னும் இருவர் வாழ்த்தப்பெறுகின்றனர். துதல்விழி நாட்டத்து இறையவன் எல்லாக் கடவுளிலும் முன்னே நிற்கிருன், இந்திர விகாரம் ஏழையும் கோவலன் வலஞ்செய்து செல்லுகின்றன். ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலும் மாலிருஞ் சோலை மலைப் பெருமாளும் கோவலனுடைய மதுரைப் பிரயாணத்துக்கிடையே காட்சி தருகின்றனர். இந்திர னது பெருமையும் பிற தேவர்களுடைய பெருமையும் அங்கங்கே கூறப்படுகின்றன. காய்தல் உவத்தல் இன்றி நடுநிலைமை வழிநின்று காப்பியம் இயற்றப் புகுந்த இளங்கோவடிகளுடைய பெருமையை வேறு எப் புலவர் பெருமையோடும் ஒப்பிடுதல் ஏற்புடையதன்று. தம்.தம் சமயத்தால் சிறப்பிக்கப்பெறும் தெய்வத்தைப் பாடும் காப்பியத்தை அவ்வச் சமயத்தோர் பாராட்டுவர். சிலப்பதிகாரமோ சாதி சமய வேறுபாடு அற்ற பத்தினித் தெய்வத்தைப் பற்றியது. அத்தெய்வத்தை