உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தமிழ்க் காப்பியங்கள்

கவுந்தியடிகள் கூற்ருக ஜைன சமயக் கொள்கைகளை வெளியிடினும் இத்துணை வன்மையும் பகையுணர்ச்சியும் அவற்றிற் காணப்படவில்லை. -

கூலவாணிகன் சாத்தனர் தம் சாதியினராகிய வணிக மரபினர் யாவரையும் உயர்ந்த நிலையில் வைத்துக் கதை அமைக்கின்ருர். அவர் காப்பியத்தில் உள்ள வணிக மாதர் கற்புக்கரசியராகவும் சிறந்த குணம் உடையவராக வும் திகழ்கின்றனர். பிற சாதி மாதர்களிற் பலர் கற்பு நெறி வழுவியராகவும் கணவரால் கைவிடப்பட்டவராக வும் அமைகின்றனர்.

மணிமேகலையின் நடை சிலப்பதிகாரத்தினும் எளிமை வாய்ந்தது. சில பொழுது வருணனைகளும், கூற்று வகைகளும் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. காரண காரியங்களுடன் ஒரு விஷயத் தைக் கதாபாத்திரத்தின் கூற்ருக அமைத்துக் காட்டு வதில் அவர் வல்லவர். சில பகுதிகள் இக்காலத்து மாளுக்கர்களுக்கும் விளங்கும்வண்ணம் அத்துணை எளிய நடையில் அமைந்துள்ளன.

எனினும், சில இடங்களில் சிலேடை, தொனி முதலியவை காணப்படும். இவை பிற்காலத்துக் காப்பியங்களில் அளவிறந்தனவாக உள்ளன. சமயக் கொள்கைகளை மணிமேகலையாசிரியர் விரித்துக்கூறினும், பிற்காலத்து நூல்களைப்போல ஒவ்வொரு காதையிலும் அவற்றைப் புகுத்திப் புகுத்திப் பொது நிலையில் இருந்து சுவை நுகர விரும்புவாருக்குத் தடை விளைக்கவில்லை. அதன் முற்பகுதிகள் காப்பியச் சுவையை அநுபவிப் பார்க்குப் பெருவிருந்தாக அமைந்துள்ளன. அந் நூலைப் போன்றனவே சிந்தாமணியும் சூளாமணியும் என்று கூறவேண்டும். W. .