உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 265 பெருங்கதைச் சோலை

பெருங்கதையோ விரிந்த கதையமைப்பை உடைய

தாதலின் பல வகையான செய்திகளையும் கூறுவதற்கு நிலளுக விளங்குகின்றது. அதன் நடை சிறிது கடின மாக இருப்பினும் அதன்கண் அமைந்த பல சிறந்த செய்திகளையும் முறைகளையும் வேறு எந்த நூலிலும் காண்டல் அரிது. அந் நூலின் முற்பகுதியையும் பிற் பகுதியையும் இழந்தது தமிழருக்குப் பெரிய நஷ்டம்.

பெருங்கதையில் அமைந்த நடையைச் சில முறை படித்துப் பழகிவிட்டால், மிகவும் கம்பீரமாக விஷயங்களை விரித்துக் காட்டும் அதன் ஆசிரியரின் பேராற்றலை நாம் வியவாமல் இருக்க முடியாது. மயிர் வினைஞன் மயிர் களைவதற்கு ஒரு காதையும், மகளிர் பந்தாடலுக்கு ஒரு காதையும் கூறும் அப் பெரும்புலவர் கைப்பட்ட சிறிய நிகழ்ச்சியும் அவருக்கென வாய்த்த கவிச் சுவையிலே ஊறி வெளி வருகின்றது. ஒரு நிகழ்ச்சியோடு தொடர் புள்ள நுட்பமான செய்திகளையும் விரித்து ஓவியமாக்கும் திறல் படைத்தவர் அவர். சில அரும்பதங்கள் அதன் கண் அமைந்திருப்பதல்ை யாவரும் அதனை உணர்ந்து அநுபவிக்க இயலாவிடினும், தமிழ்நயம் அறியப் புகுவார் பெருங்கதைச் சோலையிலே புகுந்து அதன்கண் கமழும் மலர்களையும் கனியும் பழங்களையும் நுகர்தல் மிகவும் அவசியமாகும்.

ஜைன சமயக் காப்பியமே யாயினும் அதில் பிடிக்குப் பிடி நமசிவாயம் ஆகச் சமயக் கருத்துக்கள் குறுக் கிடுவதில்லை. உதயணன் அராந்தானத்தை வலஞ் செய்வதாக உள்ள பகுதியில் அருகன் கோயில் வருணிக் கப்படுகின்றது. அப் பிரிவிற்கூடக் கொங்குவேளிர் ஒரு

1. அராங்தானம் - அருகஸ்தானம் :அருகக் கடவுளின் ஆலயம், !