பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 21

பெயரளவில் சிலப்பதிகார உரையினுல் தெரிந்த நாட கத்தமிழ் நூல்கள் (1) பரதம், (2) முறுவல், (3) சயந்தம், (4) குணநூல், (5) செயிற்றியம், (6) பரதசேபைதீயம், (7) மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்னும் ஏழுமாகும்.

இவற்றுள் பரதம் என்பது அடியார்க்கு நல்லார் காலத்தே கேள்வியளவாக நின்றதொரு பழைய நூலென்று தெரிகின்றது. இது வடமொழியில் உள்ள பரதமுனிவரது நாட்டிய சாத்திரத்தின் மொழி பெயர்ப்போ, அன்றித் தனித் தமிழ் நூலோ இன்ன தென்று துணிந்து கூறுதற்கில்லை. வடமொழி நாட்டிய நூலின் மொழிபெயர்ப்பாயின், இத் தமிழ் நூல் வட மொழி நூலுக்குப் பிந்தியதென்று கொள்ள வேண்டும். பரதமுனிவருடைய காலத்தைப்பற்றி அறிஞர் பலவாறு கூறுகின்றனர். கிறிஸ்து சகாப்த ஆரம்பமென்றும், கி. பி. இரண்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியென்றும்’ பலதிறப்பட்ட கருத்துக்கள் உள்ளன. தொல்காப்பியத் துக்குப் பிற்பட்டனவாகவே மேற்குறித்த காலங்கள் அமைகின்றன. அடியார்க்கு நல்லாரால் அகத்தியத்துக்கு முன்னர் வைத்துப் பேசப்படும் இத்தமிழ் நூல், தொல் காப்பியத்துக்கு முன்பு இயற்றப்பட்டதாகக் கோடலே ஏற்புடையதாகும். -

முறுவல் என்பதும் அடியார்க்கு நல்லார் காலத்தே பெயர்க் கேள்வியளவில் நின்ற நூலென்று தெரிகிறது.

சயந்தம் என்பது அடியார்க்கு நல்லாரால் மேற் கோளாகக் காட்டப்படும் நூல்களுள் ஒன்று. இந்நூலிற் சில சூத்திரங்கள் அவர் காலத்தே வழங்கி வந்தன.

1. Sanskrit Drama by A. B Keith, P, 81. 2. Some aspects of Literary Criticism in Sanskrit by A. Sankaran,

IᏢ . 10. -