பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தமிழ்க் காப்பியங்கள்

இந்திரன் குமாரளுகிய சயந்தனென்பவன் நாடகத் தோடு தொடர்புள்ள வரலாறுடையவன். ஆதலின் அவன். பெயரால் இந்நூல் இயற்றப்பட்டது போலும். . "அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே” என்பதொரு சூத்திரம் இந்நூலில் உள்ளதாகத் தெரிய வருகின்றது. .

குணநூல் என்பதும் சயந்தத்தைப்போல எண்ணப் படுவது. நாடகவுறுப்பாகிய அகச்சுவையைப்பற்றி விரிவாகக் கூறும் நூலென்று தோன்றுகிறது.

"குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே” என்பது இந்நூற் சூத்திரங்களுள் ஒன்று.

செயிற்றியம் : இது செயிற்றியனரென்னும் ஆசிரிய ரால் சூத்திர'யாப்பில் இயற்றப்பட்டது. இதிலிருந்து சில சூத்திரங்களைச் சிலப்பதிகார அரும்பதவுரை யாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் எடுத்துக் காட்டுகின்றனர். இளம் பூரணரும் சில காட்டினர். பேராசிரியர் மெய்ப்பாட்டியல் உரையில் ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டினர்.

பரதசேனுபதியம் : இந்நூல் ஆதி வாயிலாரென்னும் ஆசிரியரால் வெண்பாவால் செய்யப்பட்டது; சிலப்பதி கார உரை எழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற் கோளாகக் கொண்ட நூல்களுள் ஒன்று.

மதிவாணர் நாடகத் தமிழ் நூல் : இது சூத்திரத் தாலும், வெண்பாவாலும் மதிவாணனரென்னும் பாண்டியர் ஒருவராற் செய்யப்பெற்ற நாடகத் தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார், கடைச்சங்க மிரீஇய பாண்டி 1. சிலப்பதிகாரம், அரும்பத முதலியவற்றின் அகராதி. பிற்காலத் தில் இயற்றப்பெற்ற பரதசேனபதியம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று உண்டு. அது நூற்பாக்களால் ஆகியது. அதன் ஒரு பகுதிமாத்திரம்

இப்போது கிடைத்திருக்கிறது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் கிலேய வெளியீடாக அது வெளியாகியிருக்கிறது.