பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 23

யருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனர்செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூல்' என்று சிறப்பிப்பர். இதற்குக் கூத்த நூலென்றும் ஒரு. பெயர் உண்டுபோலும்."

இவற்றையன்றி வேறு பல நாடகத் தமிழ் இலக் கண நூல்கள் முற்காலத்தே இருந்தன. அவை யாவும் இப்பொழுது கிடைக்கவில்லை யாதலின், அவற்றில் உள்ள செய்திகள் அறிதற்கரியவாயின. சிலப்பதிகார உரையில் நாடகத் தமிழ்த் தொடர்புடைய செய்திகளில் நாடக இலக்கியமாகிய கதையைப்பற்றியும் அதனை அமைக்கும் முறையைப்பற்றியும் சில செய்திகள் கிடைக் கின்றன. அவை பின்னர் ஆராயப்படும். வீரசோழிய உரை, தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை என்பவற்றிலும் சில செய்திகள் வருகின்றன. -

2. யாப்பிலக்கண நூல்கள்

Eாடகத் தமிழ் இலக்கணத்தில் காப்பிய வரையறை யோடு தொடர்புடைய செய்திகள் இருத்தல்போல இசைத் தமிழ் இலக்கணத்தில் இல்லையென்றே தோன்றுகின்றது. இயற்றமிழிலக்கணப் பகுதிகளுள் பிற்காலத்தே வடமொழியைப் பின்பற்றி எழுந்த அணி யிலக்கணங்களை யன்றிப் பழங்கால இலக்கணங்களில் உள்ள பொருளதிகாரமும் யாப்பதிகாரமும் காப்பியத் தைப்பற்றிச் சில இடங்களில் ஆராய்கின்றன. சொல் லதிகாரத்துக் கூறப்படும் பொருள்கோள் வகைகளில் நிரனிறை, விற்பூட்டு முதலியனவும் பிற்காலத்தில்

1. சிலப்பதிகாரம், அடியார்க்கு கல்லார் உரைப்பாயிரம். 2. டிெ 5 : 22-3. அடியார். -