பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தமிழ்க் காப்பியங்கள்

அலங்காரங்களாக வழங்கப்படுகின்றன. ஆதலின் அவற்றைப்பற்றிக் கூறும் பகுதிகளும் அணியிலக்கணத் தொடர்புடையனவேயாம். அகப்பொருளில் கூறப்படும் பொருள் வகைகளும் புறப் பொருளில் விரித்துரைக்கப் படும் துறைகளும் காப்பியங்களுக்கு உபகாரப்படுவனவே யாம். இங்ங்ணம் வடமொழியாளரால் காப்பிய இலக் கணம் கூறுவதாகத் தனியே நூலாக்கப்பட்ட அணி யிலக்கணம் (Poetics) தமிழ் இலக்கணங்களுள் சொல், பொருள், யாப்பென்னும் மூன்றிலும் காணப்படும் சில பொருள்களின் தொகுதியெனவே கூறத்தகும். இக் கருத்தையே, அணியிலக்கணமெனத் தனியே ஒன்று தமிழுக்கு வேண்டுவதன்று என்னும் கொள்கையை யுடைய பேராசிரியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் விளக்குகின்ருர் :

'இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங் களுடன் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலினுள்ளும் சொல்லுகின்ற சில பொருள் களையும் வாங்கிக்கொண்டு மற்று அவை செய்யுட் கண்ணே அணியாமென இக்காலத்து ஆசிரியர் நூல் செய்தாரும் உளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்ருகியும் வரும், தாம் காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியுமென்பது. அல்ல தூஉம் பொருளதிகாரத்துட் பொருட்பகுதிகளெல் லாம் செய்யுட்கு அணியாகலான் அவை பாடலுட் பயின்றவை யெனப்பட்டன என்ற தல்ை அவை யெல்லாந் தொகுத்து அணியெனக் கூருது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்ருமென்பது. - .