பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ்க் காப்பியங்கள்

என்பது காண்க. இதிலிருந்து பல சூத்திரங்கள் யாப்பருங் கல விருத்தியில் மேற்கோளாக வந்துள்ளன.

"இமிழ்கடல் வரைப்பி னெல்லேயின் வளாகத்

தமிழியல் வரைப்பில் தாமினிது விளங்க யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் எழுத்தசை சீர்தளே அடிதொடை தூக்கோ டிழுக்கா மரபின் இவற்ருெடு பிறவும் ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி ளுேரே”

என்பது இதன் முதற் குத்திரம் போலும்,

காக்கைபாடினியம்

காக்கைபாடினியார் என்னும் பெண் புலவரால் இயற்றப்பெற்றது இந்நூ. லென்பது இதன் பெயரினல் தெரிய வருகின்றது. பாடினி யென்பது பெண்பாற் பெய ராகும். எட்டுத் தொகை நூல்களிற் சில செய்யுட்கள் க்ாக்கைபாடினியார் நச்செள்ளையார் என்ற புலவராற் பாடப்பட்டன. அவர் இயற்பெயர் நச்செள்ளையா ரென்பது. . . . -

அவர் விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டி ஒரு செய்யுளை இயற்றினர். அது எட்டுத் தொகையுள் ஒன்ருகிய குறுந்தொகையில் 220-ஆம் செய்யுளாகக் கோக்கப்பட்டுள்ளது. இங்ங்னம் காக்கையைச் சிறப் பித்துப் பாடினமையின் அவர் காக்கைபாடினியாரென்ற பெயர் பெற்றனர்.”

காக்கைபாடினியம் என்னும் இலக்கணத்தை இயற் றிய காக்கைபாடினியார் இந்தக் காக்கைபாடினியார் நச்செள்ளையாரோ, அன்றிப் பிறரோ தெரியவில்லை. ஒருவராகவே கொள்ளுதல் ஏற்புடைத்தாகும்.

1. பா. வி. ப. 18, 2. குதுத் தொகை, முகவுரை, ப. 3.