பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம்

வித்துவான் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவுடன் 1934-ஆம் ஆண்டு முதல் 1937-ஆம் ஆண்டு வரையில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன். மாணவனுக் குரிய ஊதியத்தைப் பல்கலைக் கழகத்தில் பெற்றேனே இயன்றி என் ஆராய்ச்சி முற்றும் என் ஆசிரியப்பிரான் அவர்களிடமே அமைந்தது. எனக்கு வழிகாட்டும் பேராசிரியராக அவ ர்கள் இருந்தா ர்கள். எப்ே பாதுமே அவர்கள் அடிபற்றி ஒழுகினாலும், நான் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணாக்கன் ஆனபோது சம்பிரதாயப்படி ஒரு பேராசிரியரிடம் இருந்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமாதலால் அந்தப் பொறுப்பை பூரீமத் ஐயரவர்களே ஏற்றுக் கொண்டார்கள். அந்த மூன்று வருஷங்களும் ஆராய்ந்து தெளிந்து எழுதிய ஆராய்ச்சி என்று இதனைச் சொல்ல இயலாது. ஐயரவர்களுடைய ஆராய்ச்சிக்குரிய - ஏவல்களையும் செய்துகொண்டு இதனையும் ஆராய்ந்தேன். நான் எழுதிய கட்டுரையைச் சிறிது சுருக்க வேண்டுமென்று பல்கலைக் கழகத்தார் பணித்தனர். அதன்படி ஒரளவு சுருக்கியதை அவர்களே தங்கள் வெளியீடாக 1940-ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள். அவர்கள் அச்சிட்ட பிரதிகள் யாவும் செலவான பின் பல ஆண்டுகளாக இது கிடைக்காமையால் மீட்டும் இதை வெளியிடலாம் என்று எண்ணினேன். முன்பு