பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 37

பாடுதலும், கிளவிப் பொருளல்லவற்ருேடு பாட்டுடைத் தலைமகனைப் பெயரும் ஊரும்முதலிய உறுப்புக்களைச் சேர்த்துப் பாடுதலும், தீயனவற்றை அவன் பகை வரைச் சார்த்திப் பாடுதலும் போன்ற பல செய்திகள் அந் நூலிற் காணப்படும். *

தக்காணியம் என்பதொரு நூலின் பெயர் தொல் காப்பியம் அவிநயம் முதலிய நூல்களோடு சேர்த்துக் கூறப்படுகின்றது. அதல்ை அந் நூலும் அவ்விரண் டைப் போலத் தமிழுக்குரிய எழுத்திலக்கணம் முதலிய அனைத்தையும் வரையறுக்கும் நூலெனவே கொள்ளல் ஏற்புடையதாகும். -

யாப்பருங்கலமும் காரிகையும்

Gഥക്കോ எடுத்துக் காட்டிய பல நூற்பெயர்களி லிருந்து பழங்காலத்தில் தமிழில் யாப்பிலக்கணம் எவ் வளவு விரிவாக இருந்ததென்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். அந்நூல்களிலிருந்து கிடைக்கும் சூத்திரங் களைக்கொண்டு ஆராயுங்கால் யாப்பிலக்கணத்திற் சில வகைக் கொள்கைகள் ஒன்ருேடொன்று மாறுபடுவன வாக இருந்தனவென்பது தெரியவரும். அசைகளை நேர்பு நிரைபு எனப் பிரிப்பதும், அடிக்கு எழுத்தெண்ணிக் கட்டளையடிகளாகக் காட்டுவதும், தளையிலக்கணம் கூரு தொழிவதும், பாவினங் கூருமையுமாகிய சில கொள்கை கள் பிற்காலத்தே மாறிவிட்டன. தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் அதற்கு வேறுபட்டும் பல நூல்கள் பழங்காலத்தில் இருந்தன. ஆயினும் நாளடைவில் வட மொழித் தொடர்பு மிகுதிப்படவே யாப்பிலக்கணத்தில்

1. ur. c3. u. 537.