பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழ்க் காப்பியங்கள்

வேறு சில பழைய நூல்கள்

யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப்படும் யாப்பிலக்கண நூல்கள் வேறு சில உண்டு. பரிமாணணுர், பனம்பாரளுர், நல்லாறனர், வாய்ப்பியனுர், கடிய நன்னியார், பாடலஞர் என்னும் ஆசிரியர்கள் இயற்றிய நூல்களிலிருந்து பல சூத்திரங்கள் அங்கங்கே வந்துள்ளன. பெரிய பம்மம் என்றதொரு நூல் யாப்பி லக்கணம் கூறுவதாகத் தெரிகின்றது. இவற்றையன்றிச் செய்யுளியல், யாப்பியலென்னும் பெயர்களோடு சில சூத்திரங்கள் உள்ளன. அவை தொல்காப்பியச் செய்யு ளியலில் உள்ளவை அல்ல. ஆதலின் அவை தனியே செய்யுளியல் என்னும் பெயரோடும் யாப்பியலென்னும் பெயரோடும் வழங்கி வந்த நூல்கள் போலும். .

ஒழிந்த விகற்பங்கள் கவிமயக்கறையுள்ளும், பிறவற். றுள்ளும் கண்டுகொள்க' என்பதன்கண் கவிமயக்கறை யென்னும் நூலொன்று குறிக்கப்பட்டுள்ளது. கவி முத லிய நால்வரது இலக்கணம் உணர்த்தும் இடத்தில் இது காணப்படுகிறது. ஆதலின் கவிமயக்கறை யென்னும் நூலுள் கவிஞர்களின் வகையைப்பற்றிய செய்திகள் இருத்தல் வேண்டுமென்பது ஊகித்தறியப்படும்.

பாடுதல் மரபின் விரிவைப் பெரிய முப்பழம் என்னும் நூலிற் கண்டுகொள்ளலா மென்பது ஓரிடத்திற் காணப்படுகின்றது. அந்நூலும் யாப்பின் வகைகளைக் கூறுவதென்றே கொள்ளவேண்டும். குலனும் விச்சை யும் ஒழுக்கமும் பருவமும் என்றிவற்றிற்குத் தக்க வகை யால் பாட்டுடைத் தலைமகனையும் அவன்சின்னங்களையுமே

1. பா. வி. ப. 518. 2. ஷ்ை, 516.