பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 35

ளாகிய காப்பியத்தைப்பற்றிய செய்திகளும் இதில் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும்.

சங்க யாப்பு

- இது ஏதோ ஒரு சங்கத்தாரால் நூலாகக் கொள்ளப் பெற்ற இலக்கணமென்று பெயரிலிருந்து தெரிகின்றது. பெரும்பாலும் கடைச்சங்க காலத்தே தனியே யாப்பைப் பற்றி விரித்துரைக்கப்பட்ட நூலாக இருத்தல் கூடும். இந்நூலில் பாவினங்களைப்பற்றிய செய்தி இருப்பதா கத் தெரிகின்றது. ஆதலின் இது தொல்காப்பியத்தி னும் சில பகுதிகளில் மாறுபட்டதென்று கொள்ளலாம்.

மயேச்சுவரர் யாப்பு

மயேச்சுவரர் என்னும் புலவர் ஒருவர் மிக விரிவாக யாப்பு நூலொன்றை இயற்றினர். அதில் வடநூற் கண் உள்ள செய்திகளும் சொல்லப்பட்டன போலும். யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர் இவரை அடைமொழி களோடு சிறப்பித்துப் பாராட்டுவர்: 'பிறை நெடுமுடிக் கறைமிடற்றரளுர் பெயர் மகிழ்ந்த பேராசிரியனுர் (ப.53), 'நீர்மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்' (ப. 110), வாமமேகலை மாதையோர் பாகஞர் நாமமகிழ்ந்த நல்லாசிரியர்'(ப.127), திரிபுர மெரித்தவர் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் (ப. 159), திரிபுர மெரித்த விரிசடை நிருத் தர் பேர் மகிழ்ந்த பேராசிரியர் / (ப. 211) என வருவன வற்றைக் காண்க. யாப்பருங்கலத்திற்கு மூலமாக இருந்த இலக்கணங்களுள் இதுவும் ஒன்றென்றே தோற்றுகிறது.

1 μ. τ. & υ, 115. 2. υλι, όχι. L. 48.