பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 . தமிழ்க் காப்பியங்கள்

பின் ஓர் இடத்தில் அவர், பிற்காலத்துக் காக்கை பாடினியாரும் தொல்காப்பியரோடு பொருந்தவே நூல் செய்தாரென்பது (மரபு. 95, உரை) எனக் கூறுவதல்ை இச் சிறுகாக்கைபாடினியம் தொல்காப்பியத்தைப் பின் பற்றியே இயற்றப் பெற்றதென்று கொள்ளலாகும்.

இந்நூலிலிருந்து பல சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக வந்துள்ளன. அவற் ருல், அவர் பாவினங்களுக்கு இலக்கணம் உரைத்தன ரென்று தெரிய வருகின்றது. -

கையளுர் யாப்பு

யாப்பருங்கல விருத்தியுரையில் கையணு ரென்னும் புலவர் பெருமானல் இயற்றப்பெற்ற நூலிலிருந்து பல சூத்திரங்கள் காட்டப்படுகின்றன. சில இடங்களில் அவ் வுரையாசிரியர் எழுதிய குறிப்புக்களால் இந்நூலுக்கு உதாரணங்கள் காட்டிய உரையொன்றும் கையனரால் இயற்றப்பட்டிருத்தல் கூடுமென்பதும், இந்நூலிற் சில பகுதிகள் தொல்காப்பியர் கருத்தோடு ஒப்ப நடப்பன வென்பதும் அறியலாகும். - -

நத்தத்தர் யாப்பு கத்தத்தனர் என்ற புலவரொருவர் தொல்காப்பியத் தின் வழிநூலாக ஒரு யாப்பிலக்கணம் செய்தார். இதன் கண் செய்யுளிலக்கணம் பலவகைப்படுத்திச் சொல்லப் பட்டது. நூல், உரை, பா என்பவற்றைப்பற்றிய வரை யறையும் இருந்தது. ஆதலின் தொடர்நிலைச் செய்யு

1. யா. வி. ப. 136. - 2. ఏ. u. 129, 389. 3. பி-ம். கற்றத்தனர். 4. தொல், செப். 105, பேர். 5. யா. வி. ப. 406.