பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

stു. இலக்கண நூல்கள் - 33

இடமாக உள்ளது. அகத்தியர் இயற்றியதாக அவர் குறிக்கும் ஆனந்த ஒத்தென்பது அகத்தியராற் செய்யப். பட்டதன்று என்று பேராசிரியராற் கண்டிக்கப்படு கின்றது. அங்ங்னமே காக்கைபாடினியார் தளையிலக் கணம் செய்தாரல்லர் என்று அவர் கூறுகின்ருர்.'

இகற்ருல் காக்கைபாடினியார் இயற்றியனவாக யாப்பருங்கல விருததி யுரைகாரரால் காட்டப்படுவன பழங்காலத்தில் இருந்த காக்கைபாடினியாரால் இயற்றப் பட்டன அல்லவென்னும் கருத்துச் சிலருக்கு இருந்து வந்தமை புலப்படும்.

சிறுகாக்கைபாடினியம்

பிற்காலத்தே காக்கைபாடினியா ரென்ற ஒரு பெண் பாற் புலவர் யாப்பிலக்கணம் இயற்றினர். அவரைச் சிறு காக்கை பாடினியார் என்று குறிப்பர். அவர் பிற்காலத்தவ ரென்பதைப் பேராசிரியர் பின்வருமாறு எடுத்துரைப்பர்:

'ஒழிந்த காக்கை பாடினியத்து, "வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத், தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்' எனத் தென்றிசையுங் கடலெல்லையாகக் கூறப்பட்டதாகலான், அவர் குமரியாறுள்ள காலத்தாரல்லரென்பது உம், குறும் பனை நாடு அவர்க்கு நீக்கல் வேண்டுவ தன்றென் பது உம் பெற்ரும். பெறவே, அவர் இவரோடு (-தொல்காப்பியனரோடு) ஒரு சாலை மாளுக்க ரல்ல ரென்பது எல்லார்க்கும் உணரல் வேண்டு மென்பது."

- (தொல். செய்யுள் 1, உரை.)

1. தொல். செய்யுள் 1, உரை.

த. கா-3