பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ்க் காப்பியங்கள்

மாபெரும் புலவர்; அவரது துணிபே இந்நூலுள்ளுந்: துணிபு (யா. வி. ப. 96)

'காக்கை பாடினி யார்முத லாகிய மார்க்க விப்புலவோர்’ (யா. வி. ப. 480) - -

'காக்கைபாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் மாப்பெரும் புலவர் தம் மதம்பற்றி நாலசைச் சீர் விரித்தோதினுர் இந் நூலுடையார் (டிை ப. 420)

என்பவற்ருள் யாப்பிலக்கணம் உரைத்த புலவர்களுள் பெருந்தகுதியும் பழமையும் வாய்ந்தவர் இப்பெண் புலவ ரென்பதும், ஆரிய மென்னும் பாரிரும் பெளவத்தை"த் தமிழ்ப் படுத்திய அமுதசாகர முனிவர் தம் யாப்பருங் கல நூலுக்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுள் காக்கைபாடினியமும் ஒன்று என்பதும் அறியப்படும்.

- யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் காக்கை பாடினியாரது யாப்பிலக்கணத்திலிருந்து பல சூத்திரங் களை மேற்கோள் காட்டுகின்றனர். அவற்றின் நடையை ஆராய்கையில் அவை மிகப் பழமையுடையனவாகத் தோற்றவில்லை. பல வடமொழிச் சொற்கள் அவற்றிற். பயின்று வந்துள்ளன. அன்றியும் தொல்காப்பியரைாற் கூறப்படாத தளையிலக்கணமும், தாழிசை துறை விருத்த மென்னும் பாவினங்களும் அவற்றில் சொல்லப்படு கின்றன. ஆல்ை, காக்கைபாடினியார் தளையிலக்கணம் செய்தாரல்லர் என்று பேராசிரியர் கூறுகிருர்.'

யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் காட்டும் வேறு பல நூற் சூத்திரங்களைப்பற்றிய பழமையும் ஐயத்திற்கு

1. தெ ல், செய்யுள். 1, உரை.