பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 39

தமிழ் நெறி விளக்கம்

தமிழ் இலக்கணப் பகுதிகள் அனைத்தையும் உடைய நூல்களுள் தமிழ் நெறி விளக்க மென்பது ஒன்று. இதன் பொருளியலில் ஒரு பகுதி மாத்திரம் இப்பொழுது கிடைத்துள்ளது, இதன் கண் யாப்பைப்பற்றிக் கூறும் இயல் ஒன்று இருத்தல் கூடுமென்று ஊகித்தற்கு இடம் உண்டு.'

வீர சோழியம்

இது வீர சோழ னென்னும் அரசனது பெயரைச் சார்த்தி அவன் காலத்தே இயற்றப்பெற்றதொரு நூல். பெரும்பாலும் வடமொழிச் சார்புபற்றியே இதிலுள்ள இலக்கணங்கள் அமைந்துள்ளன. இதில்தனியே யாப்புப் படலம் ஒன்றும் அலங்காரப் படலம் ஒன்றும் இருக்கின் றன. இதனை இயற்றியவர் பொன்பற்றி காவலராகிய புத்தமித்திர ரென்பவர். இந்நூலுக்குப் பெருந்தேவனர் என்ற ஒருவர் உரை யியற்றியிருக்கின்ருர். இதன் அலங்காரப் படலம் தண்டியாசிரியர் வடமொழியில் இயற்றியுள்ள "காவ்யாதர்சம் என்ற நூலைப் பின்பற்றி இயற்றப்பெற்றது. உரையாசிரியர் உரைச் சூத்திரமாகச் சில அலங்கார இலக்கணங்களை உரைப்பார்.

இலக்கண விளக்கம்

மூன்று நூற்ருண்டுகளுக்கு முன்பு திருவாரூர்த் திருக்கூட்டத்தில் தமிழ்க்கிலக்காக விளங்கிய வைத்திய நாத தேசிகரென்பவர் ஐந்திலக்கணத்தையும் கூறும் நூலாகிய இலக்கண விளக்கத்தை இயற்றினர். அதன் கண்:யாப்பு, அணி, பாட்டியல் என்னும் மூன்று பகுதிகள் தனித்தனியே இருக்கின்றன. அணியிலக்கணப் பகுதி

1. தமிழ் நெறி விளக்கம், முகவுரை.