பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ்க் காப்பியங்கள்

யில் தண்டியலங்கார சூத்திரங்களை அப்படியப்படியே எடுத்தமைத்துக் கொண்டிருக்கிருர் ஆசிரியர்.

தொன்னூல் இது வீரமாமுனிவ ரென்னும் மறு பெயர் பூண்ட பெஸ்கி பாதிரியாரால் இயற்றப்பெற்றது. செய்யுளியல் அணியியலென்னும்தனிப்பிரிவுகள் இதன்கண் உள்ளன. இதன்கண் உள்ள அணியிலக்கணம் பெரும்பாலும் தண்டியலங்காரத்தையே பின்பற்றி அமைந்துள்ளது.

முத்து வீரியம் முத்துவீருப் புலவரென்பவரால் சென்ற நூற்ருண் டில் இயற்றப்பட்ட இந்நூல் ஐந்திலக்கணங்களையும் உரைப்பது. யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் அமைந்தது. .

3. அணியிலக்கணங்கள்

இதுகாறும் கூறிய செய்திகள் பெரும்பாலும் யாப் பிலக்கணங்களைப்பற்றியன வாகும். காப்பியங்களைப் பற்றித் தனியே எடுத்துக்கூறும் இலக்கணம் அணியிலக் கணமாகும். வடமொழியில் இம்முறையைக் காணலாம். தமிழில் அணியிலக்கணம் தனியாகப் பழங்காலத்தில் இருக்கவில்லை. வடமொழித் தொடர்பில்ை இவ்விலக் கணம் தமிழிலும் தனியே உளதாயிற்றென்பதில் ஐயம் இல்லை. - -

இறையன ரகப்பொருள் உரையில் வரும்,

தமிழ்தான் நான்கு வகைப்படும், எழுத்தும் சொல் லும் பொருளும், யாப்புமென' . -

т. е. 1, டரை.