பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 41

என்னும் பகுதியில் அக்காலத்தில் தமிழ் இலக்கணத் தின் பிரிவு யாப்பிளுேடு நின்றிருந்ததென்று தெரிகிறது. ஆதலின் அக்காலத்தின் பின்னரே அணியிலக்கணம் தமிழில் தனியே அமைக்கப்பட்டதென்று கூறலாம்.

அணியியல் அணியியல் என்னும் நூலொன்று தமிழில் இருந்தது. அதன் சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியராலும் நேமிநாத உரையாசிரியராலும் காட்டப்பட்டிருக்கின்றன. அடியார்க்கு நல்லாரும் சில சூத்திரங்களை அணியியலென்னும் பெயரோடு எடுத்துக் காட்டுகின் ருர். அவர் கூறுவன யாவும் தமிழ்த் தண்டி யலங்காரத்தில் உள்ளவை. ஆதலின் அவர் தண்டி யலங்காரத்தையே அணியியலெனக் கொண்டாரென்று தோற்றுகின்றது. முற்குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர் களும் காட்டும் சூத்திரங்கள் தண்டியலங்காரத்திற் காணப்படவில்லை. ஆதலின் அணியியலென்ற பெய ரோடு பழைய தமிழ் நூலொன்று இருந்ததென்றே கொள்ள வேண்டும். அந்நூல் அடியார்க்கு நல்லார் காலத்திலே வழக்கொழிந்து வீழ்ந்தது போலும்.

அணியியலுக்கு உரையொன்றும் உண்டென்று எண்ண இடம் இருக்கிறது. அவ்விலக்கண நூலில் செய்யுட்களின் வகை, சொற்பொருளணிகள், சித்திர கவிகள், நூல் வகை முதலிய பல செய்திகள் சொல்லப் பட்டனபோலும்.

'அணியியலுடையாரும்,

'இயன்ற செய்யுட் கியைந்த பொருளை

உயர்ந்த நடையால் உணரக் கூறலும் - அருங்கல மொழியால் அரில்தபக் காட்டலும் ஒருங்கிரண் டென்ப வுயர்நடைப் பொருளே’