பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ்க் காப்பியங்கள்

என்னும் சூத்திரத்துள் ஒருங்கிரண்டு என்புழி ஆற்ற லாற் போந்த பொருளை என்ப என்னும் முற்றுச் சொல்லோடு புலவரென்னும் பெயர் கூட்டிப் பொரு ளுரைத்தாராகலின்' என்பதிலிருந்து அணியியலுக்கு ஓர் உரையுண்டென்பது தெரியவரும்.

"இஃது, அகவல் ఇమిruraమిచేు அணியியலுடை

யார் காட்டிய பாட்டு ' என்பதல்ை அந்நூல் செய்யுள் வகைகளைப்பற்றியும் ஆராய்வதென்று கொள்ளல் தகும். - - 'உருவக மாதி விரவிய லிரு வருமலங் காரமும்' என்னும் யாப்பருங்கலச் சூத்திர உரையில் உரை யாசிரியர் இருபத்தேழு அணிகளை எடுத்துரைத்து, 'அவை அணியியலுட் கண்டு கொள்க’ ன எழுது கின்றர். அதல்ை அணியியலில் அவ்விருப்த்தேழு அணிகளையும்பற்றிய இலக்கணங்கள் அமைந்திருந்தன. என்று கொள்ளல் தகும். . -

மற்ருேரிடத்தில் அவ் வுரையாசிரியர் செய்யுள் வகையைப்பற்றிக் கூறுகையில்,

"செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின்

தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள் உரையிடை மின்டைத்த பாட்டுடைச் செய்யுள் இசைநுவல் மரபின் இயன்ற செய்யுள் நயநில மருங்கிற் சாதியொடு தொகைஇ அவையென மொழிப அறிந்திசி னேரே' என்ற சூத்திரத்தைக் காட்டி, என்ருேதப்பட்ட வெல்லாம் அணியியலுட் காண்க என உரைத்தார். மேலே காட்டிய சூத்திரம் அணியியற் சூத்திரம் போலும்.

1. பா. வி. ப. 99. 2. ար. వు. u. 219, 8. .ை ப. 525.