பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 43 தொல்காப்பியனர் கூறும் செய்யுள் வகைக்கும்

இச் சூத்திரத்துக் கண்ட வகைக்கும். வேறுபாடு உண்டு. அவர் இயற்றமிழ்ச் செய்யுளைமட்டும் ஏழு வகையாகப் பிரித்தனர். இவரோ இயல், இசை, நாடகம் என்னும் மூவகையையும்பற்றிக் கூறினர். அவற்றுள் இயற்றமிழ்ச் செய்யுள் (1) தனிநிலைச் செய்யுள், (2) தொடர்நிலைச் செய்யுள், (3) அடிபல தொடுத்த தனிப் பாச் செய்யுள், (4) உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று நான்கு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தொடர்நிலைச் செய்யுளும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளும் காப்பியங்களாகும். -

- இசைநுவல் மரபின் இயன்ற செய்யுளென்பது இசைக்குரிய பாட்டுக்களாம். அவற்றை இக்காலத்தில் ஸாஹித்தியம் என்று கூறுவர். உருப்படிகள் என்று தமிழால் சொல்வர். நயநிலை மருங்கிற் சாதியென்பது நாடகச் சாதிகளைக் குறிக்கும்.

'நயநிலைப் படலமாவது நாடகம், கூத்தமார்க்கமென். பதும் அது' என்று வீரசோழிய உரையாசிரியர் கூறுதல் காண்க. ஆதலின் நயநிலைச் செய்யுளென்னும் நூல்கள் நாடகக் காப்பியங்களாகும். அவற்றையும் காப்பியங் களில் சேர்த்தலே முறை.

இங்ங்ணம் தொகுத்துக் கூறப்பட்ட சூத்திரம் உள்ளது கொண்டு இதிற் கூறப்பட்ட செய்யுள் வகைகளைப்பற்றிய இலக்கணங்களை வகுத்துக் கூறும் சூத்திரங்களும் அணி யியலில் இருத்தல் வேண்டுமென்றே தெளியலாம்.' தொல்காப்பியனர் ஏழுவகைச் செய்யுட்களைத் தொகுத்

-

1. பொருட்படலம், 21, உரை.