பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ்க் காப்பியங்கள்

துக் கூறிப் பின்னர்த் தனித் தனியே ஒவ்வொன்றன் இலக்கணத்தையும் வகுப்பது காண்க. .

'இந்த இருது வருணனை அணியியலுட் காண்க." என்று பிறிதோரிடத்தில் யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் எழுதுவர். அதனுல் காப்பிய இலக்கணங்கள். விரிவாக அணியியலில் சொல்லப்பட்ட்னவென்று கருத நேர்கின்றது. இருது வர்ணனை காப்பியங்களில் சொல் லப்படும். அதனைச் சொல்லும் மரபு முதலியன அணி யியலில் வகுக்கப்பட்டிருப்பதாக மேலே காட்டிய உரைப் பகுதி தெரிவிக்கின்றது. இங்ங்னமே காப்பியங்களுக் குரிய வருணனைகள் பிறவும் தனித் தனியே அந்நூலின் கண் சொல்லப்பட்டிருத்தல் வேண்டுமன்ருே ?

வேருேர் அணியிலக்கணம்

அணியிய லென்னும் பெயரையுடைய நூலையன்றி வேறு சில அலங்கார நூல்களும் தமிழில் உண்டாகி வழக் கொழிந்தன போலும். தொல்காப்பியம் மரபியலின் உரையில் பேராசிரியர் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறலென்னும் மூவகைக் குற்றங்களும் உடையதாக ஓர் அணியிலக்கண நூலைக் குறிப்பாற் புலப் படுத்துவர். அவ்வுரைப் பகுதியை ஆராய்கையில், அவர் தம் மனத்தில் ஒரு நூலைக் குறிக்கொண்டே அதனை எழுதினரென்று தெளிவாகின்றது. அவர் அங்கே காட்டும் மூன்று சூத்திரங்கள் அவ்வணியிலக்கணத்தி லுள்ளவை யென்றே கொள்ளத் தகும். அம்மூன்றும் வருமாறு :

1. ப. 532. 2. தொல். மரபு. 108, உரை.