பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 45

' தன்மை யுவமை யுருவகந் தீவகம்

பின்வரு நில்யே முன்ன விலக்கே வேற்றுப்பொருள் வைப்பு வேற்றுமை எனுஅ.” ' உருவக முவமை வழிநிலை மடக்கே

விரிசுடர் விளக்கென மரீஇ வருவன.” ' தன்மை. யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலேயே முன்ன விலக்கே வேற்றுப்பொருள் வைப்பு வேற்றுமை யென்ருங் கெண்வகை யியல செய்யுட் கணியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே.” இவற்றுள் மூன்ரும் சூத்திரத்துட் காணப்படும் அணிகளின் பெயர்கள் தண்டியலங்காரத்தும் காணப் படுகின்றன. அவற்றின் பெயர்கள் வீரசோழிய அலங் காரப் படலத்தில் வேறுபட்டுள்ளன. இதல்ை தண்டி யலங்கார நூலார் தாம் நூல் செய்யப் புகுங்கால் இங்கே குறித்த அணியிலக்கண நூலில் வழங்கிய பெயர்களை எடுத்து அமைத்துக் கொண்டாரென்று கருத நேர்கின்றது.

எனினும் தண்டியலங்காரத்திற் கூறப்பட்ட அலங் காரத் தெரகையும் இந்நூலிற் கூறப்பட்டவற்றின் தொகையும் ஒன்ருக இல்லை. இந்நூல் எட்டு அணிகளைக் கூறுவது போலும். தண்டியாசிரியர் முப்பத்தைந்து கூறுவர். - -

தண்டியலங்காரம் இக்காலத்தில் பயின்று வழங்குவது தண்டியலங்கார மாகும். அது காவ்யாதர்சம் என்னும் வடமொழி நூலின் வழிநூலாகும். வடமொழி நூலின் ஆசிரியர் தண்டி யென்பவர். - - -

வடமொழிக்காவ்யாதர்சமென்பது மிகச்சிறப்புடைய நூலாகும்; அலங்கார சாஸ்திரங்களில் பாமஹாலங்.