பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ்க் காப்பியங்கள்

காரத்தை அடுத்துத் தோன்றியது, சிலர் பரமஹாலங் காரத்துக்கு முன்பே இயற்றப்பட்டதென்று சொல்வர். காவ்யாதர்சத்தின் காலத்தைப்பற்றிப் பலவகையான கொள்கைகள் இருந்து வருகின்றன. ஆரும் நூற்ருண் டென்று சிலரும் ஏழாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதி என்று சிலரும் எட்டாம் நூற்ருண்டின் முற்பகுதி யென்று சிலரும் கூறுவாராயினர். அந்நூலுக்குப் பதின் மூன்றுக்கு மேற்பட்ட உரைகள் உள்ள்ன வென்றும் அவற்றுள் இரண்டு உரைகாரர்கள் தமிழ்நாட்டின ரென்றும் கூறுவர். அவர்கள் தம் உரையில் தமிழ்த் தொகை நூல்களை உதாரணமாகக் காட்டுகின்றனராம்.'

காவ்யாதர்சத்தை இயற்றிய தண்டியாசிரியரும் தமிழ் நாட்டினரே யென்று கூறுவதுண்டு. தமிழில் அவர் நூலை இருவர் மொழிபெயர்த்தமை அவர்பால் தமிழ்நாட்டாருக்குள்ள மதிப்பை உணர்த்தும். கன்னட மொழியில் உள்ள கவிராஜ மார்க்கமென்னும் அலங்கார நூல், காவ்யாதர்சத்தை அடியொற்றி இயற்றப்புட்ட தாகக் கூறுவர். - - - .

தமிழ்த் தண்டியலங்காரம் வீரசோழியத்திற்குப் பின்னரே இயற்றப்பட்டிருத்தல் கூடும். அதன் ஆசிரியர் இன்ன ரென்பது குறித்துத் தெளிவான செய்திகன் தெரியவில்லை. அதற்குரிய சிறப்புப் பாயிரமாகச் சில பிரதிகளிற் காணப்படும் செய்யுள் வருமாறு :

1. Dr. R. Pichel, introduction to the edition of “Rudrata's Sringaratilaka and I`uyygka'o Sahrdayalila. . p.: 13;. M. R. Kale, Dasakumara Charita. . - 2. The Theories of Rasa and Ihvani by A. Sankaran, M. A.و Ph. D. p. 24. -

3. History of Sanskrit Poetics, vol. I, p. 70. - 4. Dandin's Kavyadarsa edited by V. Narayana Hyer, Introduc. tion, p. iii. - -