பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 47

வடதிசை யிருந்து தென்மலைக் கேகி

மதிதவழ் குடுமிப் பொதிய மால்வரை இருந்தவன் றன்பால் அருந்தமிழ் உணர்ந்த பன்னிரு புலவரின் முன்னவன் பகர்ந்த தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும் அணிபெறும் இலக்கணம் அரிதினிற் றெரிந்து வடநூல் வழிமுறை மரபினில் வழாது ஈரிரண் டெல்லயின் இகவா மும்மைப் பரத இலக்கணம் பண்புறத் தழி இத். திருந்திய மணிமுடிச் செம்பியன் அவையத் தரும்பொருள் யாப்பின் வகுத்தனன் ஆடக மன்றத்து நாடக நவிற்றும் வடநூல் உணர்ந்த தமிழ்நூற் புலவன் பூவிரி தண்பொழிற் காவிரி நாட்டு வம்பவிழ் தெரியல் அம்பி காபதி மேவருந் தவத்தினிற் பயந்த தாவருஞ் சீர்த்தித் தண்டியென் பவனே." இதல்ை தண்டியலங்கார நூலாசிரியர் சோழ நாட்டின ரென்பதும் அம்பிகாபதியென்பவருடைய குமாரரென்பதும் தெரியவருகின்றன. தண்டியாசிரியரால் வடமொழியில் இயற்றப்பெற்ற காவ்யாதர்சத்தைத் தமிழில் இயற்றியவருக்கும் தண்டியென்னும் பெயசே இயற்பெயராக அமைந்த தென்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. சண்டீச நாயனர் பெயர் தண்டியென்று வழங்குவதுண்டு. தண்டியடிகள் நாயனரென்றே ஒரு சிவனடியார் முன்பு இருந்தார். இவற்ருல் தண்டியென் னும் பெயர் தமிழ்நாட்டில் வழங்கியதென்று தெரியினும், வடமொழி நூலாசிரியரும் அதை மொழிபெயர்த்தோரும் தண்டியென்ற ஒரே பெயருடையா ரென்பது அமையாது. தமிழ் நூலாசிரியருடைய இயற்பெயர் பிறிதொன்ருகவே. இருத்தல் வேண்டும். தண்டியலங்கார மொழிப்ெயர்ப் பாக வீர சோழியம் அலங்காரப் படலம் இருப்பினும்