பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - தமிழ்க் காப்பியங்கள்

அதனைத் தமிழர் போற்றவில்லை. இத்தமிழாசிரியர் இயற்றிய நூல் அதனினும் சிறந்து தமிழுக்கே பெருமை யுண்டாக்குவதாக அமைந்தமையின் அப்பெருமைபற்றி இவர் மூல கிரந்தகர்த்தாவின் பெயரையே தமக்குச் சிறப்புப் பெயராகப் பெற்ருரென்று கொள்வதே ஏற்புடையதாகும். நாளடைவில் இவருடைய இயற் பெயர் வழக்கொழிந்து சிறப்புப்பெயரே நிலவுவதாயிற் று. தமிழ்ப் புலவர்களில் இயற்பெயர் தெரியாமல் சிறப்புப் பெயரால் அறியப்படுவோர் பலராவர்.

இத்தண்டியாசிரியர் தொல்காப்பியம் முதலிய நூல் களிலும் பயிற்சியுடையவர். நாட்டிய சாஸ்திரங்களிற் பேரறிவுடையவர். - -

'ஆடக மன்றத்து நாடக நவிற்றும்

வடநூல் உணர்ந்த தமிழ்நூற் புலவன்'

என்பதிலுள்ள நாடக நவிற்றுமென்னும் அடையைப் புலவனுக்குரியதாக்கி, இவர் கனகசபையில் கூத்துப் பயிலும் தொழிலுடையாரென்று ரீமத் மு. இராகவையங் காரவர்கள் எழுதியுள்ளார். அவ்விசேடத்தை வட நூலுக் காக்கிக் கூத்துப் பயில்வதற்குரிய இலக்கணம் உணர்த்தும் வடநூலை உணர்ந்தவனென்று கொள்ளல் பிழையாகா தென்று தோற்றுகின்றது. நாடக நூலி லும் அணியிலக்கணங்கள் காணப்படு மென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஆதலின் தமிழில் அணியிலக் கணம் செய்யப் புகுந்த ஆசிரியர் வடமொழியில் உள்ள இலக்கணங்களை ஆராய்ந்தாரென்று கொள்ளுதல் பொருந்துமன்ருே ? -

1. சாஸ்னத் தமிழ்க்கவி சரிதம், ப. 89.