பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் ❖ታ

இச் சிறப்புப் பாயிரம் தண்டியலங்காரமுதல் நூலா கிய காவ்யாதர்சத்'தைப்பற்றிச் சிறிதும் குறிப்பிட வில்லை. சிறப்புப் பாயிரத்தை மாத்திரம் படித்தவர், ‘இவர் நாடக நூல்களையும், அவற்றில் உள்ள அலங்காரங்களையும், தமிழ் நூலிற் பயின்று வரும் அணி களையும் ஆராய்ந்து தமிழ் நூல் இயற்றினர் என்றே கருத நேரும். ஆனல் தண்டியலங்காரம் வடமொழிக் காவ்யாதர்சத்தின் மொழிபெயர்ப் பென்பதில் ஐயமே இல்லை. அதற்கும் இதற்கும் உள்ள வேற்றுமை மிகச் சிறிதளவே யாகும். ஒரு மொழியில் உள்ள இலக்கண நூலை வேறு மொழிக்கு இலக்கணமாக மாற்றும்பொழுது இத்தகைய மாறுபாடுகள் அமைதல் இயல்பே.

இங்ங்னம் உள்ள தலைமையான செய்தியை இச் சிறப்புப் பாயிரம் கூருமையிலுைம், ஆசிரியரது இயற் பெயரைத் தெரிவியாததனுலும் இது பிற்காலத்தில் ஒரு வரால் செய்யப்பட்டதென்றும், இதிற் கூறப்பெற்ற செய்திகள் அப்படியே மேற்கொள்ளற் குரியன அல்ல வென்றும் தோற்றுகின்றது. -

தண்டியலங்காரத்துக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அதனைத் திருவாவடுதுறையாதீனத்தில் 14ஆம் பட்டத்தில் தலைவராக வீற்றிருந்த பூரீ சுப்பிரமணிய தேசிகர் இயற்றியதாகச் சிலர் பதிப்பித்தனர். அது பிழை. அது பழைய காலத்திலேயே இயற்றப்பட்ட தென்று தெரிகின்றது. அவ்வுரையில் உள்ள மேற் கோள்களிற் சில, பழைய செய்யுட்கள். புதியனவாகக் காட்டப்பெற்ற செய்யுட்கள் தண்டியலங்கார நூலா

1. தண்டியலங்கார உரை அனபாய ச்ோமன் காலத்தில் இயற்றப் பட்டதென்று அந்நூலின் உரையில் உள்ள மேற்கோள்களால் தெரிய வரு கின்றது. அந்நூலுரையாசிரியர் பெயர் விளங்கவில்லை.-சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 161.

த, காண4