பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ்க் காப்பியங்கள்

சிரியர் இயற்றியவை யென்று தோற்றுகின்றது. பிரயோக விவேக நூலாசிரியரும் இக் கருத்தைக் கொண் டவரென்பது, தண்டியாசிரியர் மூலோதாரணமும் காட்டினுற் போல, யாமும் உரையெழுதியதல்லது மூலோதாரணமும் காட்டினும் என்னும் அவர் கூற்ருல் தெரிகின்றது. -

தண்டியலங்கார உதாரணச் செய்யுட்கள் மிக அழ கானவை. அவற்றில் பல பாடல்கள் அனபாய னென் னும் சோழ அரசனைப் பாராட்டுகின்றன். முதல் உதாரணச் செய்யுளிலேயே அனபாயன் புகழ் வருகின்றது.

"என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ

பொன்னே அனபாயன் பொன்னெடுந்தோள்-முன்னே தனவேயென் ருளும் சயமடந்தை தோளாம் புனவேய் மிடைந்த பொருப்பு” என்பது காண்க -

வாழ்த்தணியின் உதாரணம் கூறுமுகத்தால் ஆசிரியர்,

"மூவாத் தமிழ்பந்த முன்னூல் முனிவழி

ஆவாழி வாழி அருமறையோர்-காவிரிநாட் டண்ணல் அனபாயன் வாழி அவன்குடைக்கீழ் மண்ணுலகில் வாழி மழை” - என்று அனபாயன வாழ்த்துகின்ருர். இவற்ருல் இவ் வாசிரியர் அனபாய சோழன் காலத்தில் வாழ்ந்து அவளுல் ஆதரிக்கப் பெற்றவரென்று ஊகிக்கலாம். அனபாயனென்னும் சிறப்புப் பெயர் இரண்டாங் குலோத்துங்கனுக்கு உரியது. அவன் கி.பி. 1133 முதல் கி.பி. 1146 வரையில் அரசு புரிந்தவன். அதனல் தண்டி யாசிரியருடைய காலம் பன்னிரண்டாம் நூற்ருண்டின் முற்பகுதியென்று கூறலாம். . . .