பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 51

தண்டியாசிரியருடைய காலத்தில் அனபாய சோழ னது அவைக்களத்தில் தலைமைப் புலவராக வீற்றிருந் தவர் கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர். அவரைத் தண்டியாசிரியர், - .

சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுளே

நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள்-ஒன்று மலரிவரும் கூந்தலார் மாதர்நோக் கொன்று மலரிவரும் கூத்தன்றன் வாக்கு”

என்னும் செய்யுளிற் பாராட்டியிருக்கின்றனர். அதனல் இவர் கூத்தருடைய மாளுக்கரோ என்று கருதவும் இடம் உண்டு. - . . .

கூத்தர் கலைமகளுக்கு அடியவர். "ஆற்றங்கரைச் சொற்கிழத்தி வாழியே” எனத் தாம் இயற்றிய தக்க யாகப் பரணியில் சொல்லின் கிழத்தியை வாழ்த்து கின்ருர். தண்டியாசிரியரும், - .

"சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி

சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே’’ என்று தம் நூலைத் தொடங்குகின்ருர். பொருளணியிய லின் தொடக்கத்திலும் கலைமகள் துதியொன்றை அமைக்கிருர். இவற்ருல், இவரும் தம் ஆசிரியரைப் பின் பற்றுவாராகிக் கலைமகளை வழிபட்டு வந்தாரென்று புலப் படுகின்றது.

தண்டியலங்கார நூலுக்கு அப் பெயர் பிற்காலத்தே வழங்கியது போலும். காவ்யாதர்சமென்ற முதனுரற் பெயரை இந்நூல் பெறவில்லை. தண்டியலங்கார உர்ை யில், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், அணி யினது இலக்கணம் உணர்த்தினமையான் அணியதி காரம் என்னும் பெயர்த்து' என வருவதல்ை இதற்கு