பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 53

இதனை இயற்றியவர் ஆழ்வார் திருநகரித் திருக் குருகைப் பெருமாள் கவிராய ரென்பவர். இவர் பதினரும் நூற்ருண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வாரது புகழ் கூறும் உதாரணச் செய்யுட்களைப் பெரும்பாலும் அமைத்து இந் நூலை இயற்றியுள்ளார். இவர் ஆழ்வார் திருநகரியிற் கோயில் கொண்டருளிய நம்மாழ்வாருடைய ஆஸ் தான கவிராயராதலால் தாம் இயற்றிய இந்நூலுக்கு ஆழ்வார் பெயரால் மாறன் அலங்கார மென்னும் பெயரை அமைத்தார். மாறனென்பது நம்மாழ்வாரின் திருநாமம். தண்டியலங்கார நூலாசிரியரைப் போலவே இவரும் மூலோதாரணங்களை இயற்றினர்.

இந்நூலுக்குச் சிறந்ததோர் உரை உண்டு. அது தென்றிருப்பேரையில் இருந்த காரிரத்னகவிராயர் என்பவரால் இயற்றப்பெற்றது. அவரது உரையிலுைம் காப்பிய சம்பந்தமான பல அரிய செய்திகளை அறியலாம். இந்நூல் , மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப் பட்டிருக்கின்றது. .

குவலயானந்தம்

வடமொழியிலுள்ள குவலயானந்தத்தை மொழி பெயர்த்து ஆக்கப்பட்ட அணியிலக்கண நூல் இது. வட மொழி நூல் பூ அப்பைய தீகூகிதரால் சந்திராலோக மென்னும் நூலுக்கு வியாக்கியானம் செய்யும் முறையில் இயற்றப்பெற்றது. அதனைத்தமிழில் இயற்றிய ஆசிரியர் மாணிக்கவாசகர் என்பவர். இச் செய்யுள் நூலையன்றி வடமொழிக் குவலயானந்தத்திற் கண்ட இலக்கணத் தையே தமிழ் வசனத்தில் அமைத்து, ஏற்ற உதாரணங்

1. மாறன் அலங்கார வரலாறு, மாறனலங்காரப் பதிப்பு, ப. 20.