பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ்க் காப்பியங்கள்

களோடு அணியிலக்கண வி ைவிடை யென்ற நூலொன்று சென்ற நூற்ருண்டில் வாழ்ந்த விசாகப் பெருமாளையரால் இயற்றப்பட்டது. வடமொழிக் குவல யர்னந்தத்துக்கு மூலமாகிய சந்திராலோகத்தின் அலங்காரத் தொகைச் செய்யுள், இராமநாதபுரத்தில் வாழ்ந்திருந்த முத்துசாமி ஐயங்காரென்பவரால் இயற்றப் பெற்றது.

சென்ற நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்திருந்த வரும், சென்னை அரசாங்கக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவருமாகிய தி. ஈ. ரீநிவ்ாசராகவாசாரியா ரென்பவர் தண்டியலங்கார லாரம் என்றதொரு வசன நூலை இயற்றியிருக்கின்ருர். காப்பிய இலக்கணத்தைப் பற்றி வடமொழி நூல்களிற் கண்ட பல செய்திகளை அவர் அதன்கண் வெளியிட்டிருக்கின்ருர்.

அணியிலக்கணம் அல்லாத அலங்காரங்கள்

கண்டன் , அலங்காரம் என்னும் பெயரையுடைய பழைய நூலொன்றிலிருந்து சில செய்யுட்கள் களவியற் காரிகை உரையிற் காட்டப்படுகின்றன. அந்நூற் பெயர்தண்டியலங்காரம், மாறனலங்கார மென்னும் நூற் பெயர்களைப் போல அமைந்திருத்தலைக் கொண்டு அணி பிலக்கண நூலென்று கொள்ள இடம் இல்லை. அதி லிருந்து காட்டப்பெற்ற செய்யுட்கள் அகத்துறைக்கு இலக்கியங்களாக உள்ளன. ஆயினும், புறப்பொருள் வெண்பா மாலையில் புறப்பொருள் இலக்கணத்துக்கு இலக்கியமாக உள்ள வெண்பாக்களின் தொகுதி இருத் தலைப் போலக் கண்டனலங்காரத்திலும் அணியிலக் கணத்துக்கு இலக்கியமாக வெண்பாக்கள் உள்ளன வென்றும், அவற்றிற் பல அகத்துறையமைதி யுடை.

1. ராவ்ஸாஹெப் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள் பதிப்பு.