பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 55

மையின் அகப்பொருளிலக்கணத்திற்கு உதாரணமாகக் களவியற் காரிகையுரையாசிரியரால் எடுத்துக் காட்டப் பட்டனவென்றும் சிலர் கருதுதல் கூடும். அலங்கார மென்னும் பெயரால் அணியிலக்கணமல்லாத நூல்களும் உண்டு. அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரம் என்ற பிரபந்தம் இதற்கு ஒரு சான்ருகும். எனவே, அலங்காரமென்ற பெயரைக் கொண்டு, கண்டனலங் காரத்தை அணியிலக்கண நூலாக நிச்சயிக்க இயல

4. பாட்டியல் நூல்கள்

இதுகாறும் யாப்பணி இலக்கண நூல்களைப்பற்றி ஆராய்ந்தோம். இனி, காப்பிய இலக்கணங்களைப்பற்றிய செய்திகளைச் சிறிதளவு கூறும் பாட்டியல் நூல்களைப் பற்றி ஆராய்வோம்.

பாட்டியல் என்பதற்குப் பாட்டின் இலக்கண மென்பது பொருள். செய்யுளிலக்கியங்களின் இலக்கண மென்றும் கூறலாம். பெரும்பாலும் பாட்டியல்களில் பத்துவகைப் பொருத்தங்களும், செய்யுள் இலக்கணங் களிற் சிலவும், பிரபந்தங்களின் இலக்கணங்களும் காணப்படும். - -

இவ்வகை நூல்கள் பிற்காலத்திலே எழுந்தன. ஆயினும், பழங்காலத்திலும் பாட்டியல் நூல்கள் இருந்தனவென்று சிலர் கொள்வர்.

பன்னிரு பாட்டியலும் பாட்டியல் மரபும் இப்பொழுது கிடைக்கும் பாட்டியல் நூல்களில்

பழையது பன்னிரு பாட்டிய லென்பது. அந்நூல் அகத்தி யர் முதலியோரால் இயற்றப்பட்டதன்றென்பதும், பிற்