பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ்க் காப்பியங்கள்

காலத்தில் இயற்றப் பெற்றதென்பதும் ஆராய்ச்சியாளர் கொள்கை. தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய பேரா சிரியர், நச்சினர்க்கினியர் ஆகியவர்கள் எழுதியுள்ள சில குறிப்புக்களால் அவர்கள் காலத்தே பாட்டியல்நூல் வழக்கில் இருந்ததென்றும். ஆயினும் அது அவர்களுக்கு உடம்பாடு அன்றென்றும் தெரிய வருகின்றது. -

பேராசிரியர் பாட்டியல் மரபு என்னும் நூலை நின்று பயனின்மையென்னும் குற்றத்துக்கு உதாரணமாக்குவர்.

இப் பாட்டியல் மரபென்பது பன்னிரு பாட்டியலி னின்றும் வேருனதென்றே தெரிகின்றது. யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர், பாட்டியல் மரபுடையார் சூத்திர மென்று இரண்டை மேற்கோளாகக் காட்டுவர். அவை பன்னிரு பாட்டியலிற் காணப்படவில்லை. ஆதலின் பாட்டியல் மரபு என்று ஒரு நூல் தனியே இருந்த தென்றே கொள்ளவேண்டும். அது பாவையும் பாவினங் களையும் பிரபந்தங்களையும் காப்பியங்களையும்பற்றிய இலக்கணங்களை வரையறுத்துக் கூறுவது போலும். அது பன்னிரு பாட்டியலுக்கு முந்திய்தோ பிந்தியதோ தெரியவில்லை. -

பன்னிரு பாட்டியல் 358 சூத்திரங்களோடு பதிப்பிக் கப்பட்டிருக்கின்றது. அச்சூத்திரங்கள் பல ஆசிரியர் களர்ல் இயற்றப்பட்டவை. சில சூத்திரங்களுக்கு இயற்றி யவர் பெயர் காணப்படவில்லை. இப்பொழுது தெரிந்த வரையில் கையளுர், இந்திரகாளியார், அவிநயனுர், பர ணர், அகத்தியர், கல்லாடனர், கபிலர், சேந்தம் பூதனுர், கோவூர் கிழார், மாபூதனர், சீத்தலையார், பல்காப்பியனுர், பெருங்குன்றுார் கிழார் என்பவர்களுடைய பெயர்களோடு

. தொல். மரபு. 109, உரை.