பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் • 57

பல சூத்திரங்கள் அதில் உள்ளன. அப் பெயர்களை யுடைய பழம் புலவர்களே அவற்றை இயற்றியிருப்பார்க ளென்பது நம்புதற்குரியதன்று. இந்நூலின் நடையும்: இதிற் கூறப்பட்ட செய்திகளும் பிற்காலத்தாரது வழக்கைத் தழுவி அமைந்தன. திருவள்ளுவ மால்ை முதலிய, நூல்களைப்போல இது வேறு யாராலோ இயற்றப்பெற்றுப் பழைய புலவர்களின் பெயரைப் பொய்யே கொண்டு வழங்குவதாகும். -

இதில், அகத்தியர் பாட்டியல் என்ற பெயரோடு ஒரு சூத்திரம் காணப்படுகின்றது. இந்திர காளியாரென்னும் புலவர் பெயரோடு காணப்படும் சூத்திரங்களில் ஐந்தை வச்சணந்தி மாலை உரைகாரர் எடுத்துக்காட்டி, இவை இந்திரகாளியம் என்று உரைக்கின்ருர்; அன்றியும் இந்திர் காளியமென்னும் நூலின் வழி நூலாக அதனைக் கூறுவர். இவற்ருல் அகத்தியர் பாட்டியல், இந்திர காளியம் என்பன போன்ற பெயர்களையுடைய பாட்டியல் நூல்கள் பல தமிழ்நாட்டில் உலவினவென்றும், அவை வழக்கொழிந்ததனலோ மிக்க விரிவுடையனவாக இருந் தமையாலோ அவற்றிலுள்ள சூத்திரங்களைத் தொகுத்து யாரோ ஒருவர் இந்நூலை அமைத்திருக்க வேண்டு மென்றும் தோற்றுகின்றது. , .

நவநீதப் பாட்டியலின் சிறப்புப் பாயிரத்தில்,

'ஈட்டிய எண்ணெண் கலையோ டியலிசை நாடகமும் காட்டிய போதக் குறுமுனி

ஆதி கலைஞர்கண்ட பாட்டிய லானவை எல்லாம்

தொகுத்து”

என்று வருகிறது. இதலுைம், அகத்தியர் இயற்றிய பாட்' டியல் நூல் என்றும், மற்றப் பழம் புலவர்கள் இயற்றிய