பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ்க் காப்பியங்கள்

பாட்டியல்கள் என்றும் பல நூல்கள் அக்காலத்தில் வழக் கில் இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இச் சிறப்புப் பாயிரத்தின் உரையில், முத்தமிழையும் உரைத்த குறுமுனியாகிய அகத்திய முனிவர் திருவாக்கில் உண்டாக்கப்பட்ட பருனர் பாட்டியல் என்னும் பரப்பினை" என்று உரைகாரர் எழுதுகிருர். அகத்தியர் பாட்டிய லுக்குப் பருனர் பாட்டியல் என்பதும் ஒரு பெயரென்று அதல்ை தெரிகிறது. பரணர் பாட்டியல் என்பதையே ஏடெழுதுவோர் பிழையாக அப்படி எழுதிவிட்டனர் போலும். -

பன்னிரு பாட்டியலென்னும் பெயரிலுள்ள பன்னி ரண்டென்பது எதைக் குறிக்கின்றதென்று விளங்க வில்லை. பன்னிரண்டு ஆசிரியர்களால் இயற்றப்பட்ட தென்று கூறுவார் உண்டு. பன்னிரு படலமென்ற தொரு புறப்பொருள் இலக்கண நூல் முன்பு இருந்த தென்றும், அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு படலம் இயற்ற, அவற்றைத் தொகுத்து அந்நூல் அமைக்கப் பட்டதென்றும் கூறுவர். அத்தகைய வரலாற்றைப் பன்னிரு பாட்டியலுக்கும் கூறலாமா என்பது ஆராய்ச் சிக்கு உரியது. சில சூத்திரங்களின் ஆசிரியர் பெயர் தெரியாத இந்த நிலையிலும் பதின்மூவர் பெயர்கள் காணப்படுகின்றன.

இந்நூல் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என மூன்று பிரிவை உடையது. இனவியலில் காப்பியங் களைப்பற்றிய செய்திகள் உள்ளன.

பன்னிரு பாட்டியலின் காலத்தை வரையறுக்க ஆதாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.

1. வித்துவான் வேங்கடராஜுலு ரெட்டியார் : பரணர், ப. 65.