பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 59.

வச்சணந்தி மாலை

பன்னிருபாட்டியலின் பின்பு எழுந்த பாட்டியல் நூல் களுள் சிறந்தது வச்சணந்தி மாலை யென்பது. இது வெண்பாப் பாட்டியலென்றும் வழங்கும். இதனை இயற்றிய ஆசிரியராகிய குணவீர பண்டிதரென்பார் இந்நூலைத் தம் ஆசிரியராகிய வச்சணந்தியின் பெய ரோடு வழங்கவைத்தார். இந்நூல் இயற்றப்பட்ட காலம் திரிபுவன வீரனென்னும் அரசனது காலம். கி. பி. 1178-ஆம் ஆண்டுமுதல் 1216-ஆம் ஆண்டு வரையில் அரசாண்ட மூன்ருங் குலோத்துங்கனே இப்பெயருடை யவ ளுதலின் அவன் காலத்தே இந்நூல் இயற்றப் பெற்ற தென்பர். எனவே, இது பன்னிரண்டாம் நூற் ருண்டின் இறுதியில் இயற்றப் பெற்றதென்பது போதரும்.

நவநீதப் பாட்டியல்

வேநீத நடனர் என்பவர் இயற்றிய நவநீதப் பாட் டியல் மூன்று இயல்களை உடையது; 108 கலித்துறைகள் அமைந்தது. குறுமுனி யாதி கலைஞர் கண்ட பாட்டிய லானவை எல்லாந் தொகுத்துப் பயன்படும்படி இயற் றிய நூல் அது என்று சிறப்புப்பாயிரம் கூறுகிறது.

பொருத்த இயல், செய்யுள் மொழி இயல், பொது மொழி இயல் என்பவை இந்நூலில் உள்ள மூன்று பகுதி கள். செய்யுள் மொழி இயலில் பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களின் இலக்கணங்களை ஆசிரியர் சொல்கிருர். பிரபந்தங்கள் பலவற்றின் இலக்கணங்களை உரைத்தபின் பெருங்காப்பியத்தின் அமைதியை எடுத்துக் கூறுகிருர், நான்கு செய்யுட்களில் பெருங்காப்பியத்தின் இலக்

1. சாலனத் தமிழ்க்கவி சரிதம், ப. 84.