பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ்க் காப்பியங்கள்

கணத்தை வகுக்கிருச். அவ்விலக்கணம் தண்டியலங் காரத்தைப் பின்பற்றியே அமைந்திருத்தலால் நவநீதப் பாட்டியல் அவ்வலங்கார நூலுக்குப் பின்பே இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்று கொள்ளலாம். இதற்கு இரண்டு உரைகள் உண்டு. . . .

வேறு சில UTLquiಹರ್ನಿ

வாருணப் பாட்டியல், தத்தாத்திரேயப் பாட்டியல், பண்டாரப் பாட்டியல் என்பன சில பாட்டியல்கள்.

நவநீதப் பாட்டியலின் உரையில் பல பாட்டியல் நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப் பெறு கின்றன. அவிநயனர் கலாவியல், இந்திர காளியம், கல்லாடம், கல்லாடனர் கலாவியல், கல்லாடனர் வெண்பா, செய்யுள் வகைமை, திருப்பிரவாசிரியர் தூக்கியல், தொல்காப்பியனர் பரட்டியல், பருனர் பாட் டியல், பொய்கையார் கலாவியல், மாமூலம், முள்ளியார் கவித்தொகை என்னும் நூற் பெயர்களுடன் சூத்திரங். களை அந்நூல் உரையாசிரியர் காட்டுகிருர். நடையமைதி யைக் கொண்டு பார்த்தால் அவை பழமையானவை என்று சொல்வதற்கில்லை. ஆயினும், வெவ்வேறு ஆசிரி

1. வாருணப் பாட்டியல் என்ற நூலிலிருந்து மேற்கோளாகச் சில சூத்திரங்கள் மட்டும் கூரைகளில் காணப்படுகின்றன: நூல் கிடைத்திலது. சங்கத் தமிழும் பிற்காலத் يتم A 36 . م و اؤه بوع. -

2. 'தத்தனத்திரேயப் பாட்டியல் என்பதை என்னுடைய தமிழாசிரியt களுள் ஒருவராகிய செங்கனம் பூர் விருத்தாசல ரெட்டியாரவர்க்ளிடம் பார்த்துப் பாடமும் கேட்டிருக்தேன். அது விருத்தங்களால் அமைக் துள்ளது; புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை’ என்று இதைப்பற்றி டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிமூர்கள்; சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 37. - . -

3 நவநீதப் பாட்டியல்: எஸ், கவியாணசுந்தர ஐயர், ச. கு. கணபதி ஐயர் பதிப்பு: முகவுரை, ப, iw. -