பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi

வேறுபாடுகள் பல. அணியிலக்கணம் தனிப்பிரிவாகத் தொல்காப்பியத்திற் சொல்லப்படவில்லே. வடமொழியின் தொடர்பு மிகுதியான பின்னரே அதனைத் தனியே வரை யறை செய்யும் நூல்கள் தமிழில் எழுந்தன. ஆயினும் பழங்காலத்து இலக்கணங்களில் அணியிலக்கணத் தொடர்புடைய செய்திகள் பல உண்டு. அவை நாளடை வில் பெருகி உருப்பெற்றன. -

தமிழ் இலக்கணப் பிரிவுகளில் ஒவ்வொன்றின் வரலாறும் தனித்தனியே ஆராய்ந்து அமைத்தற்குரியதே யாகும். அவற்றுள் அணியிலக்கண வரலாற்றை ஒருவாறு எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழணியிலக்கணம் வடமொழிச் சார்புபற்றியே வளர்ந்ததாதலின் அம்மொழியிலுள்ள அணியிலக்கண வரலாற்றை நன்கு தெளிந்த பின்னரே இதனை உணர்தல் கூடும். இத்துறையில் பூரீமான் டாக்டர் சுசீல குமார தே எழுதிய வடமொழி அணியிலக்கண வரலாறு’ என்னும் புத்தகமும், ரீமான் சங்கரன் எழுதிய ஸம்ஸ்கிருத இலக்கிய விமரிசனத்தில் சில துறை கள்’ என்னும் ஆராய்ச்சியும் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.

இதில் உள்ள முதல் ஐந்து பிரிவுகளும் காப்பிய இலக்கண வரலாருகும். மேலுள்ள இரண்டு பிரிவுகளும் காப்பிய இலக்கியங்களைப்பற்றியனவாம். காப்பிய இலக் கியங்களைப்பற்றிய பகுதிகளில் பிற்காலத்துப் புராண காப்பியங்களைப்பற்றித் தனித்தனியே உரைக்கப் புகுந்தால் அது மிக விரியுமாதலால் அத்துறையில் நான் புகவில்லை. தமிழ்க் காட்பிய இலக்கியங்களின் விமரிசனமாக இப் பகுதியை நான் எழுதவில்லை. இலக்கியங்கள் வரவர வளர்ந்து வந்த முறையையும் அவற்றின் சுவை வேறுபாடு களேயும் ஆராய்ந்து எழுதப் புகுந்தால் அதுவே மிகட்