பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முகவுரை

"தமிழ்க் கார்பியங்கள் என்னும் இப்புத்தகம் சென்னை ஸர்வ கலாசாலேயில் நான் தமிழ் ஆராய்ச்சி மாணுக்களுக இருந்த காலத்தில் செய்த ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டது; காப்பி இலக்கணங்களின் வரலாற்றையே தலைமையாகக் கொண்டது. -

காப்பியங்களின் அமைப்பு முறை, கவிச் சுவை ஆகிய விஷயங்களேப்பற்றி ஆராய்ந்து எழுதப்பெற்ற புத்தகங்கள் பிற மொழிகளில் உள்ளன. அத்தகைய விமரிசனங்கள் தமிழில் அதிகமாக இல்லை. தமிழ் மொழியின் சரித்திரம் மிக விரிந்தது; நீண்ட கால அளவை உடையது. அதை ஆராய்ந்து தக்க வண்ணம் விரித்து எழுத ஆராய்ச்சியாளர் முற்படுவரேல் அச் சரிதம் பெரும் பயனுடையதாக விளங்கு மென்பதில் தடையில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கணங்களின் வளர்ச்சி முறை ஆகியவை தனித்தனியே ஆராய்ச்சி செய்தற் குரியன. தமிழ் இலக்கணம் நாளடைவில் விரிந்து கொண்டே வருகின்றது. அதன் பிரிவுகளில் ஒவ்வொன்றும் தனித்தனி:ே :ல கிள்ேகளே உடையதாக விரிகின்றது. தொல்காப்பியத்தில் உள்ள எழுத்திலக்கணத்திலும் சொல் லிலக்கணத்திலும் காணப்படாத பல புதிய அமைப்புக்கள் பின்பு புகுந்தன; பல பழைய மரபுகள் வழக்கொழிந்தன. அவ்வாறே பொருள், யாப்பு என்பவற்றிலும் உண்டான