பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழ்க் காப்பியங்கள்

"பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும் -

பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவேன் யானே’

என்று இந்நூலாசிரியர் கூறுதலின் இவர் காலத்தே அகத்தியர் பெயரால் இருந்த பாட்டியல் வழங்கி வந்த தாகத் தெரிகின்றது. - இதில் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என்னும் ஐந்து பிரிவுகள் ஆ_ண்டு. முதல் மூன்று இயல்களும் யாப்பருங்கலக் காரிகையைப் பின்பற்றியும், பின் இரண்டும் வச்சணந்தி மாலையை அடியொற்றியும் காணப்படுகின்றன. மரபிய லில் பிரபந்தங்கள்ன் இலக்கணங்கள் சொல்லப்பட் டுள்ளன. காப்பிய இலக்கணமும் ஒரு செய்யுளில் கூறப்படும்.'

இந்நூலின் முதல் மூன்று இயலுக்கு ஓர் உரை உண்டு. அவ்வுரை பெரும்பாலும் யாப்பருங்கலக்காரிகை யுரையின் துணைகொண்டு எழுதப்பட்டதாகத் தோற்று கின்றது. -

பிரபந்தத் திரட்டு

இதுகாறும் வெளிவராத சில பாட்டியல் நூல்களில் இதுவும் ஒன்று. இதில் முதலில் 96 வகைப் பிரபந்தங் களின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. மற்றப் பாட் டியல் நூல்களில் உள்ள பிரபந்தங்களிற் சிலவற்றிற்கும் வேறு புதிய பிரபந்தங்கள் சிலவற்றிற்கும் இந்நூல் இலக்கணம் வரையறுக்கிறது. இதிற் கூறப்பட்ட பல பிரபந்தங்களின் இலக்கணமேனும் இலக்கியமேனும் வேறு வகையால் புலப்படவில்லை. o

1. சிதம்பரப் பாட்டியல், 41.