பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 63

இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் பிற்பகுதிகள் சாதி, புலவர் மரபு முதலிய பல செய்திகளைப்பற்றி விரிவாகக் கூறுகின்றன.'

பிரபந்த தீபம்

- இப் பெயரை உடையதாகச் சென்னை அரசாங்கத் தொன்னூல் நிலையத்தில் ஒரு நூல் காணப்படுகின்றது." அதுவும் பிரபந்தங்களின் இலக்கணங்களைக் கூறும் பாட்டியல் நூல் போலும். அதன் பெயரிலிருந்தே இந்தச் செய்தி பெறப்படும். -

இலக்கண விளக்கப் பாட்டியல் .

வச்சணந்தி மால்ையைப் பின்பற்றியும் சில புதிய பிரபந்தங்களின் இலக்கணங்களைக் கூட்டியும் இயற்றப் பட்டது இந்நூல்; பத்து வகையான பொருத்த இலக் கணங்களும் பல வகையான பிரபந்தங்களின் இலக் கணங்களும் இதில் உள்ளன. .

பிற நூல்கள்

காப்பிய இலக்கணங்களை நேர்முகமாகக் கூருவிடி னும் பல இலக்கணச் செய்திகளை அமைக்கும்போது காப்பியத்துக்குரிய இலக்கணங்களையும் இடையிடையே சொல்லும் வேறு நூல்களும் உண்டு. எழுத்து, சொல் 1. இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் LITಗೆ 5ಹೆ. குறிப்பெடுத்துக் கொள்ள பூரீமத் மகாமகோபாத்தியாய பாக்டர் ஐயரவர்கள் அநுமதித்

தார்கள். . -

2. இதிலிருந்து சில சூத்திரங்களே நவநீதப் பாட்டியலைப் பதிப்பித்த

வர்கள்,குறிப்புரையில் காட்டியிருக்கிறர்கள். .