பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ்க் காப்பியங்கள்

முதலியவற்றை உணர்த்தும் இலக்கண நூல்களை அவ் வகையில் சேர்த்துக்கொள்ளலாம். ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். இரு வகை வழக்கிலக்கணம் உணர்த்து. மிடத்துச் செய்யுளின் இலக்கணத்தைக் கூற வந்த நன்னூலார்,

'பல்வகைத் தாதுவின் உடற்குயிர் போற்பல சொல்லாற் பொருட்கிட குக உணர்வினின் வல்லோர் அணியுறச் செய்வது செய்யுள்’’

என்ற சூத்திரத்தை அமைக்கின்ரும். இதனைக் காப்பிய இலக்கணங்களுள் ஒன்ருகக் கருதலாமல்லவா? இங்ங். ேைம சொல்லதிகாரத்தில் வரும் நிரனிறை முதலிய பொருள்கோளின் இலக்கணங்களும் காப்பிய சம்பந்தம் உடையனவே யாகும்; அவை காப்பிய அலங்காரங்களுள் சேர்க்கப்படுவன.

இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய ஆசிரியர் கள் பலர் அங்கங்கே காப்பிய இலக்கணங்கள் சிலவற்றை உணர்த்திச் செல்கிருர்கள். அங்ங்ணமே இலக்கிய நூல் களின் உரையாசிரியர்கள் உரிய இடங்களில் உணர்த் தும் சில இலக்கணங்கள் காப்பிய இலக்கணங்களாதலைக் காண்கிருேம்.

இலக்கிய நூல்களிலும் திருத்தக்க தேவர், கம்பர், தமிழ் விடுதூது ஆசிரியர் ஆதியோர் தமிழைப் பற்றியும் புலவர்களைப்பற்றியும் பாராட்டியுள்ள இடங்களில் காப் பிய இலக்கணச் செய்திகள் காணப்படுகின்றன. பிற இலக்கண நூல்களால் அறிய இயலாத பல அரிய செய்திகள் அத்தகைய இலக்கியங்களால் தெரிய வரு கின்றன. ஆதலின் அவையும் காப்பிய இலக்கணத்தைத் தொகுக்கப் புகுங்கால் மிகப் பயன்படும்.