பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ்க் காப்பியங்கள்

இவற்ருல் பழங்கதை பொருளாகக் காப்பியங்கள் உண்டாதல் நாகரிக மிக்க நாடுகளில் வழக்கமென்பதும், அத்தகைய வழக்கம் தண்டமிழ் நாட்டில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே இருந்ததென்பதும், அதுபற்றியே தொல்காப்பியர் இவ்விலக்கணம் அமைத்தனரென்பதும் உணர்தற்குரியன. பிற்காலத்தில் ஜைனர்களுக்குள் வழங்கி வந்த பழங்கதையைச் சீவக சிந்தாமணி யென்னும் காப்பியமாகத் திருத்தக்க தேவர் இயற்றி

யிருத்தல் காண்க.

விருந்து தொன்மை, தோல் என்னும் பெயர்களில் பழமை யென்னும் பொருட்குறிப்பு அமைந்துள்ளது. அவ்விரண் டும் பழங்கதையைப் பொருளாக உடையன. இனி, புது வது புனைந்த கதையைப் பொருளாக உடைய காப்பியத் தைத் தொல்காப்பியர் விருந்து என்னும் வகையில் அடக்குவர். -

"விருந்தே தானும் -

புதுவது புனேந்த ധtിക് மேற்றே" என்பது சூத்திரம். இதற்கு, விருந்து தானும் புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேற்று' என்று உரை கூறிச் சில பிரபந்தங்களை உதாரணம் காட்டுவர், பேராசிரியர், நச்சிஞர்க்கினியரும் பிரபந்தங்களையே உதாரணம் காட்டினர். இளம்பூரணர்,

விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்ன யாப்பின் மேலது என்றவாறு.

1. தொல், செப்.239.