பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 79

டினரால் வழங்கப்பட்டு வரும் பழங்கதைகள் ஹோமரென் னும் கவியால் காப்பியங்களாக்கப்பட்டன. புராண கதை கள் பலவற்றை அமைத்து வடமொழிக் கவிஞர்கள் காப் பியங்களை இயற்றியிருக்கிருர்கள். இராமாயணம்,பாரதம், பிருஹத் கதை முதலியன அத்தகையனவே. -

பொருள் தொடர்ந்து வருதற்குக் கதையே ஏற்புடைய

தாகும். கதையை விரிக்கும் வழி விரித்தும் தொகுக்கும் வழித் தொகுத்தும் பல்வகைச் சொற்பொருள் நயங்களை அமைத்தும் காப்பியங்களை ஆக்குதல் எளிது. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் தனியே நீதியாக எடுத்துக் காட்டுதலினும் கதையில் அமைத்துக் காட்டுதலே கவர்ச்சியைத் தரும்; ஆதலின் காப்பியம் கதைமேற் படர்வதாயிற்று. வித்தாரகவி என்பவன் கதை முதலாகிய செய்யுளைப் பாடும் வன்மை யுடையானென்று யாப்பருங்கல விருத்தி யாசிரியர், கூறுவர். அக் கவிஞனுடைய வித்தாரமான கவித்துவ ஆற்றல் கதை பொருளாகச் செய்யும்பொழுதுதான் வெளிப்படும். கிரேக்க மொழியில் பேரறிஞராக விளங்கிய அரிஸ்டோடில் என்பார் காப்பியங்களிற் சிறந்ததாக, "ட்ராஜெடி என்பதை அமைப்பர். அதனை அவலச் சுவையைத் தலைமையாக உடைய காவியம் என்று கூறலாம். அதற்கு ஜீவனும் ஒட்டமுமாக இருப்பது, கதையமைப்பே என்று அவர் கூறுவர். இதிஹாசங் களிலுள்ள கதை பொருளாகக் காப்பியங்களைச் செய்ய, வேண்டும் என்று பாமஹாசிரியரும் கூறினர்.'

1. Prof. Felix Lacote: Essay on Gunadhya and the Brhat Katha, Translated by Rajasabha-bhushana the Rev. A. M. Tabard.,M. A. M. R. A. S. p. 12. . . . . . . 2. L. 513. . . . . . . . . . . .

3. Aristotle on the Art of Poetry: Translated by Ingram Bywater, р. 21. - 4. Bham.aha, 1.1 9•